Home /News /entertainment /

கெட்ட வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் பேசினேன் - நித்யா மேனன்

கெட்ட வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் பேசினேன் - நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன்

சைக்கோ படத்தில் எனது கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் சில கெட்ட வார்த்தைகளை பேச வேண்டியிருந்தது. பல வார்த்தைகளை நான் அர்த்தம் தெரியாமலேயே பேசியிருந்தேன் என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சைக்கோ. த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 24-ம் தேதி வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றிருப்பதாக படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா நடத்தினர். அதில் மிஷ்கின், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகை நித்யா மேனன், இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன். நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படம் என்றாலே பிடிக்கும். காசை வீணடிக்காமல் நல்ல படங்களை எடுப்பது எனக்கு பிடிக்கும். மிஷ்கின் நேர்மையான இயக்குநர். இதுபோன்ற இயக்குநர்களின் கதையில் நடிப்பது நடிப்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.



படத்தில் எனது கதாபாத்திரம் பிடித்ததுதான் என்றாலும் சில கெட்ட வார்த்தைகளை பேச வேண்டியிருந்தது. அவற்றை என் வாழ்க்கையில் நான் பேசியதே இல்லை. பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே பேசியிருந்தேன். பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. மிஷ்கின் மீதான் நம்பிக்கையால் இந்தப் படத்தில் நடித்தேன். என்னை அவர் குழந்தைபோல பார்த்துக் கொண்டார். பாப்பா என்றுதான் அழைப்பார்” என்றார்.

நித்யா மேனனைப் பற்றிப் பேசிய இயக்குநர் மிஷ்கின், “நித்யா மேனன் எனக்குத் தங்கை போல கிடைத்தவர். என்னை முழுவதும் புரிந்து கொண்ட நடிகை அவர்” என்றார்.

மேலும் படிக்க: நான் தீவிரக் காதலன்! காதல், திருமணம் குறித்து கவின் அளித்த பளீச் பேட்டி!
Published by:Sheik Hanifah
First published:

Tags: Nithya menon

அடுத்த செய்தி