ஓடிடி தளங்களுக்கும், செய்தி வெப்சைட்டுகளுக்கும் விதிமுறைகளைக் கொண்டுவரும் மத்திய அரசு.. முழு விவரம்..

ஓடிடி தளங்கள்

உள்ளூர் செய்திகளுக்கு கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடம் கட்டண விதிப்பு குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அவ்வமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  ஊடகங்களை கையாளுவதில் நடுநிலை பேணும் நோக்கத்துடன், ஓடிடி தளங்கள் மற்றும் செய்தி வலைதளங்களின் மீதும் முக்கியமான, உணர்வுபூர்வமான தலைப்பு சார்ந்த உள்ளடக்கங்களில் முக்கிய விதிகளை விதித்து ஒழுங்குமுறைபடுத்த இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நெட்ஃப்ள்க்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உட்பட 40 ஓடிடி தளங்களும், நூற்றுக்கணக்கான செய்தி வலைதளங்களும் இருக்கின்றன.

  டிஜிட்டல் ஊடகங்களில் காக்கப்படவேண்டிய கட்டுப்பாடு என்பதன் அவசியம் இந்த மாதத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களுக்கான வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது.

  அச்சு ஊடகங்களுக்கு, ப்ரெஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பைப்போல, திரைப்படங்களுக்கு தணிக்கை துறையைப் போல டிஜிட்டல் மீடியாக்களுக்கு ஒரு கண்காணிப்புத் துறையை அறிவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு.

  ஓடிடி தளங்களின் சந்தை இந்தியாவைப் பொறுத்தவரை, 20 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ளது.  தகவல் தொழில்நுட்பத்துறை, ஓடிடி தளங்களில் வரும் உள்ளடக்கங்களைக் குறித்தும், அதில் வரும் 18+ உள்ளடக்களைக் குறித்தும் புகார்களைப் பெறுவதாகவும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் ஆஸ்திரேலியாவில் கடைபிடிக்கப்படுவதை போல, உள்ளூர் செய்திகளுக்கு கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடம் கட்டண விதிப்பு குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அவ்வமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Gunavathy
  First published: