Home /News /entertainment /

திருமணம் செய்து கொள்ளத் தயார் - ரம்யா பாண்டியன் ஓபன் டாக்

திருமணம் செய்து கொள்ளத் தயார் - ரம்யா பாண்டியன் ஓபன் டாக்

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

Actress Ramya Pandian: விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான ரம்யா பாண்டியன் காதல் திருமணம் செய்து கொள்வாரா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்

ஓவர்நைட்டில் டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்ட பிரபலங்களில் ஒருவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ரம்யா பாண்டியன் மிகவும் பரிச்சயம் ஆன முகம். தேசிய விருது வாங்கிய திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் அறிமுகமானாலும் இவரைப் பற்றி எந்த விவரமும் பெரிதாக பேசப்படவில்லை.

மொட்டை மாடியில், குஷி ஜோதிகா பாணியில் ஒரு கவர்ச்சியான போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் பிரபலமானார் ரம்யாபாண்டியன். சமீபத்தில்  திருமணம் செய்வது பற்றி செய்தி வெளியிட்டு மீண்டும் டிரெண்டில் இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

பிரபலங்கள் சிங்கிளாக இருந்தால் அவர்கள் எப்போதுமே எதிர்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான கேள்வி நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், யாரையாவது காதலிக்கிறீர்களா என்பதுதான் 34 வயதான ரம்யா பாண்டியனும் அடிக்கடி இந்த கேள்வியை எதிர்கொண்டுள்ளார். சமீபத்தில் கூட, தான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நல்ல நடிகை என்ற பெயர் பெற்றிருந்தாலும் ரம்யா பாண்டியனுக்கு அதிக புகழ் வெளிச்சம் கிடைத்தது விஜய் டிவியில் நடந்த ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டதன் மூலம் தான்.

விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவராக வந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிலும் ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவராக வந்தார். பிக்பாஸ் சீசன் 4 இவருக்கு ரசிகர்களை அதிகப்படுத்தியது. அதேபோல எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

அதற்கு பிறகு ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடையே விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை ரியாலிட்டி ஷோவின் நடுவராகவும் பங்கேற்றிருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1-ல் போட்டியாளராக ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிய நான்கு வாரங்கள் இருக்கும் பொழுது ரம்யா பாண்டியன் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்ததை பலரும் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி இறுதி வாரத்திற்கு முந்தைய வாரத்தில் விளையாட்டின் போது கால் உடைந்துவிட்டது.

கால் உடைந்தாலும் பாஸ் வீட்டிலேயே இருப்பேன் போட்டியை விட்டு வெளியேற மாட்டேன் என்று இருந்து இரண்டாவது ரன்னர் பட்டத்தையும் வென்றார். பல போட்டியாளர்கள் முதல் நாளிலிருந்து பங்கேற்று வந்து பல கடுமையான சவால்களை எதிர்கொண்ட போதும் இவர் பிக்பாஸ் முடிய சில வாரங்களுக்கு முன்னரே வந்து கடைசி இரண்டு வாரங்கள் சக்கர நாற்காலியில் ஜாலியாக இருந்துவிட்டு வந்திருக்கிறார், ரன்னர் அப்பாகவும் ஆகியுள்ளார் என்பதை பலரும் கடுமையாக எதிர்த்து விமர்சித்துள்ளனர்.

Read More : அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ஓகே சொல்வேன். விஜய் டிவி நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!

ரம்யா பாண்டியன் பலமுறை இதேபோன்ற மிகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனங்களுக்கு பெரிதாக பதில் அளிக்காத ரம்யா பாண்டியன் உடல் நலம் தேறி வருவதாக அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து திருமணம் பற்றிய கேள்விக்கு நான் திருமணம் செய்து கொள்ள தயார் என்றும் பதில் அளித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Read More : கோயிலில் குக் வித் கோமளி புகழ்.. அதுவும் யாருடன் தெரியுமா?

காதல் திருமணம் செய்து கொள்வாரா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார். நான் எப்போது வேண்டாம் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன், ஆனால் இன்னும் எனக்கான நபரை நான் பார்க்கவில்லை. அவரை பார்க்க வேண்டும், அவருக்கும் என்னைப் பிடிக்க வேண்டும். அப்படி நடந்தால் உடனே கல்யாணம் தான் என்று கூறியுள்ளார்.

 
Published by:Elakiya J
First published:

Tags: Actress Ramya Pandiyan, Entertainment

அடுத்த செய்தி