ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சில நாட்களில் சிரிப்பது கூட ரணமாக இருந்தது... புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் நடிகை உருக்கம்!

சில நாட்களில் சிரிப்பது கூட ரணமாக இருந்தது... புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் நடிகை உருக்கம்!

நடிகை சோனாலி பிந்த்ரே

நடிகை சோனாலி பிந்த்ரே

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரே, கீமோ சிகிச்சைக்குப் பின்னர் சிரிப்பது கூட ரணம் மிகுந்ததாக இருந்ததாக உருக்கமாக கூறியுள்ளார்.

  காதலர் தினம் படத்தில் நாயகியாக நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது தன்னுடைய உற்சாகமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடும் அவர், கடந்த செவ்வாய்கிழமை புற்றுநோயிலிருந்து தான் நம்பிக்கையுடன் மீண்டு வருவதாக பதிவிட்டுள்ளார்.

  இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், "கடந்த இரண்டு மாதத்தில் எனக்கு சில நல்ல நாட்களும் இருந்தன. மோசமான நாட்களும் இருந்தன. சில நாட்களில் எனது விரல்களை மேலே உயர்த்தும் போது கூட எனக்கு ரணம் மிகுந்த வலி இருந்தது. இது ஒரு சுழற்சி என்பதை அறிந்தேன்.

  உடல் வலியில் இருந்து ஆரம்பித்து அதன்பிறகு மன வலியை அனுபவிக்க வேண்டும். நிறைய மோசமான நாட்கள் இருந்தன. கீமோ சிகிச்சைக்குப் பின்னரான நாட்களை அவ்வாறு சொல்லலாம். அந்த சமயத்தில் சிரிப்பது கூட ரணம் மிகுந்ததாக இருக்கும்.

  வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நான் போராடிக் கொண்டிருந்தேன். இது கடினமான போராட்டமாக இருந்தாலும் அர்த்தமுள்ளதாக இருந்தது. இதுபோன்ற கடினமான நாட்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் யாருக்காகவும் போலியாகவும், சந்தோஷமாக இருப்பது போல் நடிக்க அவசியமில்லை.

  வலியை உணர்வதற்காக சிறிது காலத்திற்கு எனக்குள் நானே அழுதுகொண்டேன். சுயபரிதாபம் கொள்வதற்கும் என்னை அனுமதித்துள்ளேன். உணர்ச்சிகள் தவறானவை அல்ல. எதிர்மறையான உணர்வுகளைக் கொண்டிருத்தல் தவறான செயல் அல்ல. ஒரு கட்டத்திற்கு மேல் அவை உங்களை கட்டுப்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். அந்தக் கட்டத்திலிருந்து வெளியே வருவதற்கு சுய கவனம் வேண்டும். தூக்கம் எப்போதும் உதவும்.

  கீமோ சிகிச்சைக்கு பின்னர் எனது விருப்பமான ஸ்மூதியை சாப்பிடுவது மகனுடன் பேசுவது உதவியாக அமையும்.

  தற்போதைக்கு என்னுடைய சிகிச்சை தொடர்கிறது. இப்போது உடல் நலம் தேறி வீடு திரும்புவதே என் இலக்கு. வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டிருக்கிறேன்'' என சோனாலி பிந்த்ரே பதிவிட்டுள்ளார்.

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actress, Cancer, Kadhalar dinam, Sonali Bendre, Treatment