ஹைதராபாத்தில் நட்சத்திர விடுதியில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் உட்பட 142 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ராடிசன் நட்சத்திர விடுதியில் போதை விருந்து நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, பிரவுன் சுகர், கொகைன், மரிஜுனா உள்ளிட்ட போதைப் பொருள் விநியோகம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக 5 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 12 கிராம் எடையுள்ள கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போதை விருந்தில் கலந்து கொண்ட மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரான நாக பாபுவின் மகள் நிகாரிகா, திரைப்பட பாடகர் ராகுல், ஆந்திர காவல்துறை உயர் அதிகாரியின் மகள், தெலுங்கு தேசம் எம்.பி அன்ஜன் குமார் யாதவின் மகன் உள்ளிட்ட 142 பேர் கைது செய்யப்பட்டனர்.
எனினும் விசாரணைக்கு பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். போதை விருந்து சம்பந்தமாக நட்சத்திர விடுதி மேனேஜர்கள் அனில்குமார், அபிஷேக் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பஞ்சாரா ஹில்ஸ் காவல் ஆய்வாளர் சிவச்சந்திரன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;s
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.