முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திறமையாளர்களை தேடும் ‘கலர்ஸ் தமிழ்’... விரைவில் ஒளிபரப்பாகிறது புதிய ரியாலிட்டி ஷோ!

திறமையாளர்களை தேடும் ‘கலர்ஸ் தமிழ்’... விரைவில் ஒளிபரப்பாகிறது புதிய ரியாலிட்டி ஷோ!

வெல்லும் திறமை

வெல்லும் திறமை

Vellum Thiramai | வெல்லும் திறமை நிகழ்ச்சி குறித்த புரோமோ வீடியோவில் பிரபல பாலிவுட் நடிகையான பர்னீதி சோப்ரா தோன்றி நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டி.வி, ஜீ தமிழ், சன் தொலைக்காட்சி ஆகிய சேனல்கள் ஏற்கனவே விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையில், 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது டாப் சேனல்களுக்கு டப் கொடுத்து வருகிறது.

தமிழ் ரசிகர்கள் மனதிலும், டிஆர்பி ரேட்டிங் பட்டியலிலும் இடம் பெற ஆரம்பித்துள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி புதிது புதிதாக சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே ‘அம்மன் 3’, ‘இதயத்தை திருடாதே சீசன் 2’, அபி டெய்லர் என பேமஸ் சீரியல்களுடன் தற்போது குஷ்பு நடித்து வரும் மீரா ஒரு புதுக்கவிதை என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் ரியாலிட்டி ஷோக்களிலும் ‘போட்டிக்கு போட்டி’ என்ற புது நிகழ்ச்சியின் ஒளிபரப்பு ஆரம்பமாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினியான பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய அறிமுகங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, தற்போது மற்றொரு அசத்தல் புரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையாளர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை மக்கள் கண் முன் காட்டும் முயற்சியாக வெல்லும் திறமை என்ற புதிய நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது நடுவர்களை கவரக்கூடிய திறமையாளர்களை கண்டறிவதற்கான பணியை மாநிலம் முழுவதும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல்வேறு நபர்கள் வந்து தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் ஆடிஷன் தொடங்கியுள்ளது. நடுவர்களைக் கவர்ந்தவர்கள் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தையும் சேனல் பகிர்ந்துள்ளது.

மிதுன் சக்ரவர்த்தி, பரினீதி சோப்ரா மற்றும் கரண் ஜோஹர் போன்ற பிரபலங்கள் நடுவராக இருந்த 'ஹுனர்பாஸ்: தேஷ் கி ஷான்' என்ற பிரபலமான இந்தி ஷோவின் தமிழ் வெர்ஷனாகவே வெல்லும் திறமை நிகழ்ச்சி தயாராகியுள்ளது. இந்தியில் அதனை பார்தி சிங் மற்றும் ஹர்ஷ் லிம்பாச்சியா தொகுத்து வழங்கினர். இந்தியில் இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த தாறுமாறு வரவேற்பை அடுத்து, தற்போது தமிழில் ஒளிபரப்ப கலர்ஸ் சேனல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

வெல்லும் திறமை நிகழ்ச்சி குறித்த புரோமோ வீடியோவில் பிரபல பாலிவுட் நடிகையான பர்னீதி சோப்ரா தோன்றி நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது யார், நடுவர்களாக யார் வர வாய்ப்புள்ளது போன்ற தகவல்களை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்