இந்தி ரீமேக் மாஸ்டரில் ஹீரோவாக நடிக்கும் ஹிரித்திக் ரோஷன்? வில்லனாக விஜய் சேதுபதியா?
மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

விஜய் - ஹிரித்திக் ரோஷன்
- News18 Tamil
- Last Updated: January 17, 2021, 5:44 PM IST
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.மூன்றே நாட்களில் சுமார் ரூ.100 கோடியை வசூலித்து சாதனையும் படைத்துள்ளது. இந்த படத்தில் கல்லூரி பேராசியராக விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாவதற்கு தயாராக இருந்தது.கொரோனா ஊரடங்கால் படத்தை வெளியிட முடியவில்லை.இந்த படம் பல போராட்டங்களுக்கு பின்னர் திரையரங்குகளில் தற்போது வெளியாகிவுள்ளது.இந்த படம் ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடப்பட்டது. மாஸ்டர் திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை எண்டமால் ஷைன் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஹிரித்திக் ரோஷன் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.மேலும் ஹிந்தியிலும் விஜய் சேதுபதியே வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகிவுள்ளது.ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.