• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ராகேஷ் ரோஷன் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய ஹிருத்திக், சுசேன் கான் குடும்பத்தினர்

ராகேஷ் ரோஷன் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய ஹிருத்திக், சுசேன் கான் குடும்பத்தினர்

ஹிருந்திக் ரோஷன் குடும்பத்தினர்

ஹிருந்திக் ரோஷன் குடும்பத்தினர்

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான ராகேஷ் ரோஷன் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 71வது பிறந்த நாளை அவரது மகன் ஹிருத்திக் ரோஷன், ஹிருதன் மற்றும் ஹ்ரேஹான் அவரது முன்னாள் மனைவி சுசேன் கான் மற்றும் குடும்ப உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.

  • Share this:
    இந்த கொண்டாட்டங்களின்போது அனைவரும் ஒன்று கூடி குடும்பத்துடன் எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் ஹிருத்திக்கின் தாய் பிங்கி ரோஷன் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. ரோஷன். "அன்பு மற்றும் நினைவுகளுடன்  இந்த நாளை நாம் உருவாக்கியுள்ளோம்" என்று தனது வாழ்த்துக்களை கணவருக்காக பதிவிட்டுள்ளார்.

    தற்போது இந்த  பதிவு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டுள்ளது.  ராகேஷ் ரோஷன் அவரது பிறந்தநாள் கேக்கை வெட்டும்போது, ராகேஷ் ரோஷன் வீடு முழுவதும் கைதட்டலும், ஆரவாரமாய் மாறியது, இந்த முழு நிகழ்வையும் இன்ஸ்டாகிரமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார் அவரது மனைவி பிங்கி ரோஷன். இதில் அவரது சகோதரரும், இசை அமைப்பாளருமான  ராஜேஷ் ரோஷனும் அவர்களுடன் இணைந்துள்ளார்.

    மேலும் பிங்கி பிறந்தநாள் கேக்கின் புகைப்படத்தையும் பதிவிட்டு, "#வாழ்வில் சிறந்த கேக் இது என்றும், #சூரானிகாஷெல்திகிச்சென் # சூரானிகா என்ற ஹேஷ்டேக்குடன் , நீங்கள் வாழ்க்கையில் இளம் பெண்ணாகவே வாழ  நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கின்றோம், மற்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என் பேத்தி, உன்னை நினைத்து பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். ராகேஷ் ரோஷனின் மகனான ஹிருத்திக் ரோஷன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தை வெல்ல முடியாதவர் என கூறினார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு, ரித்திக் ரோஷன் ஜிம்மில் தனது அப்பா ஒர்க் அவுட் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.


    அதில் அவர் “அடடா! இது தான் என் அப்பா, நெவர் கிவ் அப்" என்றும், இது போன்ற காலங்களில் நாம் அனைவரும் போராட வேண்டிய தீர்வு மற்றும் தீர்மானத்தின் வகை இது! என்றும் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். எனது தந்தைக்கு இந்த ஆண்டு 71 வயதாகிறது, இருப்பினும் தற்போது வரை ஒரு நாளைக்கு 2 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். மனதளவிலும், உடலளவிலும் வலிமை கொண்ட எனது தந்தை கடந்த ஆண்டுக்கு முன்னர் தான் புற்றுநோயிலிருந்து தப்பினார். வைரஸ் தான் அவருக்கு பயப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: