ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லிவ்இன் ரிலேஷன்ஷிப்.. காதலிக்கு ரூ.100 கோடி வீடு பரிசு..? - ஹிருத்திக் சொல்வது என்ன.?

லிவ்இன் ரிலேஷன்ஷிப்.. காதலிக்கு ரூ.100 கோடி வீடு பரிசு..? - ஹிருத்திக் சொல்வது என்ன.?

ஹிருத்திக் ரோஷன்

ஹிருத்திக் ரோஷன்

Hrithik Roshan and Saba Azad | பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அவரது காதலி சபா ஆசாத் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக குடியேறியுள்ளதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. தற்போது அந்த வதந்திக்கு நடிகர் ஹிருத்திக் இறுதியாக பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் ஹிருத்திக் ரோஷன். கபீ குஷி கபீ காம், ஜோதா அக்பர், க்ரிஷ், தூம் 2, குஜாரிஷ் ஆகிய பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக உள்ளவர் ஹிருத்திக். மேலும் இவரது நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

2000 ஆம் ஆண்டு சுசேன் கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹிருத்திக் ரோஷனுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014ம் ஆண்டு இருவரும் முறைப்படி பிரிந்துவிட்டனர். தற்போது தங்களது மகன்களை இருவரும் சேர்ந்தே கவனித்துக்கொள்கின்றனர்.

தற்போது ஹ்ரித்திக் ரோஷன், நடிகை சபா ஆசாத்தை சமீப காலமாக காதலித்து வருகிறார். சபா ஆசாத் பாடகியாகவும் இருக்கிறார். இருவரும் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளுக்குச் சேர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஹ்ரித்திக் ரோஷன் தனது குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகளிலும் சபா ஆசாத்துடன் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சபா ஆசாத் தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்இன் ரிலேசன்ஷிப் முறையில் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், மேலும் இருவரும் ஒன்றாக வாழ மும்பை வெர்சோவா கடற்கரையையொட்டியுள்ள ஆடம்பர சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று மாடிகளை சுமார் ரூ.100 கோடிக்கு ஹ்ரித்திக் வாங்கியுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

Also Read : நீங்கள் யார் எனக் கேட்ட தொகுப்பாளர்... நெட்டிசன்களின் மனதை வென்ற ரன்வீர் சிங்கின் பதில்!

இணையத்தில் பரவிய இந்த வதந்திக்கு ஹ்ரித்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அந்த பதிவில் "இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. பிரபலங்கள் பற்றி வதந்திகள் பரவுவது இயல்பு தான் என்பது எனக்கு தெரியும். ஆனால் தவறான தகவல்களைத் தவிர்ப்பது நல்லதும் கூட.மேலும் இது ஒரு பொறுப்பான வேலையும் கூட" என குறிப்பிட்டுள்ளார்.

ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசேன் கான் கோவாவில் புதிய ஹோட்டல் ஒன்றை திறந்த போது கூட ஹ்ரித்திக் ரோஷன் தனது காதலியோடு அந்நிகழ்ச்சியில் சேர்ந்தே கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Bollywood, Entertainment, Tamil News