Home /News /entertainment /

’விளையாடி கொலை செய்’.. ஸ்குயிட் கேம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு ?

’விளையாடி கொலை செய்’.. ஸ்குயிட் கேம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு ?

ஸ்குயிட் கேம் வெப் சீரிஸ்

ஸ்குயிட் கேம் வெப் சீரிஸ்

தென் கொரிய தொடர்களின் சிறப்பு, அவை வெறும் வன்முறையை மட்டும் கொண்டிருப்பதில்லை. உணர்வுப்பூர்வமான விஷயங்கள் திறமையாக கையாளப்பட்டிருக்கும்.

  ஸ்குயிட் கேம் தென் கொரியாவில் தயாரான புதிய வெப் தொடர். நெட்பிளிக்ஸில் செப்டம்பர் 17 வெளியானது. இதன் நாயகன் ஒரு சூதாடி. வயதான அம்மாவின் தயவில் வாழ்கிறவன். அவனுக்கு மனைவியும், ஒரு மகளும் உண்டு. அவனது பொறுப்பின்மையால், அவனது மனைவி அவனை பிரிந்து, தனது மகளுடன் இன்னொருவனுடன் வாழ்ந்து வருகிறாள். மகள் மீது நாயகனுக்கு பெரும் பாசம். விரைவில் அவர்கள் அமெரிக்காவில் குடிபோகப் போகிறார்கள் என்பது அவனுக்கு பேரிடியாக இருக்கிறது.

  ஒருநாள் ரயில் நிலையத்தில், நாகரிகமாக உடையணிந்த இளைஞன், நாயகனிடம் நாமிருவரும் விளையாடலாமா, காசு தருகிறேன் என்கிறான். கையகல காகித அட்டையை, இன்னொரு காதித அட்டையால் எறிந்து அதனை திருப்ப வேண்டும். நாயகன் வெற்றி பெற்றால் இளைஞன் பணம் தருவான். இளைஞன் வெற்றி பெற்றால் நாயகன் பணம் தர வேண்டும். நாயகனால் அட்டையை திருப்ப முடியவில்லை. ஆனால், அந்த இளைஞன் அட்டையை திருப்பிவிடுகிறான். அவனுக்கு தர நாயகனிடம் பணம் இல்லை. அதற்குப் பதில் இளைஞன் நாயகனின் கன்னத்தில் ஓர் அறை விடுகிறான். பணத்துக்குப் பதில் அறை.

  கோபமாகும் நாயகன் மறுபடி மறுபடி முயன்று தோல்வியடைய, இளைஞன் தொடர்ந்து வெற்றி பெற்று நாயகனின் கன்னத்தை பழுக்க வைக்கிறான். ஒருமுறை இளைஞன் தோற்றுவிட, அதுவரை அறை வாங்கிய நாயகன் ஆவேசத்துடன் இளைஞனை அறைய முயல, அவன் கையைத் தடுத்து, தான் தோற்றதற்கான பணத்தை தருகிறான். ஒருபுறம் ஏமாற்றம். மறுபுறம் எதுவும் செய்யாமல் காசு கிடைத்த மகிழ்ச்சி. கொஞ்சம் பணமும் கன்னம் நிறைய அறையுமாக திரும்பும் நாயகனிடம் அந்த இளைஞன், இதைவிட அதிக பணம் கிடைக்கும் விளையாட்டு இருக்கிறது, விருப்பமிருந்தால் கூப்பிடு என ஒரு விசிட்டிங் கார்டை தந்துவிட்டு செல்கிறான்.  also read : மெகா ஹிட்டான லவ் ஸ்டோரி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

  அடுத்தடுத்து ஏற்படும் பணத்தேவை காரணமாக விளையாட்டில் கலந்து கொள்ள தீர்மானிக்கிறான் நாயகன். அவனை மயக்கப்படுத்தி, ரகசியமான இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு இவனைப்போல் 456 பேர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒன்றிலிருந்து  456 வரை எண்கள் தரப்படுகின்றன. விளையாடுகிறவர்கள் தவிர மற்ற அனைவரும் முழுமையான முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள். அவர்கள்  யார் என்று எவருக்கும் தெரியாது. முதல் விளையாட்டு பெரிய மைதானத்தில் நடக்கிறது. ஒரு ராட்சஸ் பொம்மை க்ரீன் லைட் என்று சொல்லும் போது அனைவரும் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிவர வேண்டும்.  ரெட் லைட் எனும் போது அந்த இடத்தில் சிலை போல் நிற்க வேண்டும். சிறிது அசைந்தாலும் விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். க்ரீன் லைட் என்றதும் அனைவரும் ஓடி, ரெட் லைட் என்றதும் சட்டென்று நிற்கிறார்கள். சிலரால் பேலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாற, அவர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதை சிறிதும் எதிர்பார்க்காத மற்ற போட்டியாளர்கள் அதிர்ந்து போகிறார்கள். மீண்டும் க்ரீன் லைட் ரெட் லைட். ஆட்டம் முடிகையில் கணிசமான பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதேபோல் மொத்தம் ஆறு விளையாட்டுகள்இந்த ஆறில் வெற்றி பெறுகிறவர் வின்னர். அவருக்கு பெரும் பணம் பரிசாக கிடைக்கும். என்னென்ன விளையாட்டுகள், அதன் விதிமுறை என்ன, யார் தாக்குப் பிடித்து பணத்தை வெல்கிறார்கள் என்பதை ரத்தம் தெறிக்க சொல்லியிருக்கிறார்கள்..

  also read : விக்னேஷ் சிவன் படத்தில் ஒளிப்பதிவாளர் மாற்றம்.. இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

  தென் கொரி தொடர்களின் சிறப்பு, அவை வெறும் வன்முறையை மட்டும் கொண்டிருப்பதில்லை. உணர்வுப்பூர்வமான விஷயங்கள் திறமையாக கையாளப்பட்டிருக்கும். ஒருமுறை போட்டியாளர்களுக்குள் நடக்கும் சண்டையில் ஒருவன் இறந்து போவான். அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் அனைவரும் இருக்க, அவர்கள் தலைக்குமேல் இருக்கும் பரிசுப் பணம் உள்ள ராட்சஸ கண்ணாடி குடுவையில் பணம் கொட்டும். விளையாட்டில் ஒருவர் நீக்கப்படுவதை வைத்தே (அதாவது கொல்லப்படுவதை வைத்தேபரிசுப்பணம் அதிகரித்துக் கொண்டு செல்லும்.

  also read : வலிமை ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்..  விளையாட்டில் தோற்று கொல்லப்படும் போது மட்டுமல்ல, அடித்துக் கொன்றாலும் பணம் அதிகரிக்கும் என்பது தெரிய வர, அன்றிரவு நடக்கும் கலவரத்தில் பலபேர் கொல்லப்படுவார்கள். விளையாட்டு, மனித பேராசையின் வேட்டைக்களமாக மாறும். இதேபோல் மனிதனின் பொறாமை, பேராசை, காட்டிக் கொடுத்தல், வஞ்சனை, விட்டுக் கொடுத்தல் என சகல குணங்களும் உயிர் மீதான ஆசையில் எப்படி நிறம் மாறுகின்றன என்பதை ஊடிழையாகக் கொண்டு நகர்கிறது கதை

  ஸ்குயிட் கேமின் முதல் சீஸனில் மொத்தம் 9 எபிசோடுகள் உள்ளன. மிகச்சிறந்த தொடர் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒன்பது எபிசோடுகளையும் போரடிக்காமல் பார்க்க வைக்கும்.
  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Netflix

  அடுத்த செய்தி