• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • ஆடையின்றி நடித்த போது... மன உணர்வை வெளிப்படுத்திய அமலாபால்!

ஆடையின்றி நடித்த போது... மன உணர்வை வெளிப்படுத்திய அமலாபால்!

அமலா பால்

அமலா பால்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆடையில்லாமல் நடிக்கும் காட்சி படமாக்கப்படும் போது எனக்கு பதற்றமாக இருந்தது என்று நடிகை அமலாபால் கூறியுள்ளார்.

  ‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

  பெண் ஒருவர் ஆடையின்றி ஓர் இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்துக்கு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படம் ஜுலை 19-ம் தேதி திரைக்கு வரும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  இந்நிலையில் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை அமலாபால், “பெண்களை மையப்படுத்தி என்னிடம் வந்த பல கதைகள் பொய்யாகவே இருந்தன. அதனால் நான் திரைத்துறையிலிருந்து விலகவும் முடிவு செய்திருக்கிறேன். அந்த நேரத்தில் தான் நான் ஆடை படத்தின் கருவை படித்தேன்.

  அதன் பின்னர் ரத்னகுமார் எனக்கு டெல்லியில் ஒரு உணவகத்தில் கதை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் தயாரிப்பாளரை சந்தித்தேன். படத்தில் நடிப்பதற்கு முன்பாக பயிற்சி பட்டறையில் பணியாற்றினோம். 9 வருட சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.

  ‘ஆடை’ படத்தில் அமலாபால்


  நல்ல டீம். ஆடையில்லாமல் நடிக்கும் காட்சி படமாக்கப்படும் நேரம் நெருங்கும்போது தான் எனக்குள் ஒருவித பதற்றம் இருப்பது தெரிய வந்தது. அப்போது எனது மேலாளரிடம் எவ்வளவு பேர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார்கள் என்று கேட்டேன். அந்த குறிப்பிட்ட காட்சி படமாக்கப்படும் போது செட்டில் கேமராமேன் உட்பட 15 பேர் தான் இருந்தார்கள். லைட் மேன் உட்பட பணியாற்றும் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அனைவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  அப்போது உடனிருந்தவர்கள் மீது இருந்த நம்பிக்கைதான் பாதுகாப்பு உணர்வானது. பாஞ்சாலிக்கு 5 கணவர்கள் என்று சொல்வார்கள். அதுபோல் எனக்கு 15 பேர் கணவர்களாக இருப்பதாக உணர்ந்தேன். அவர்கள் கொடுத்த பாதுகாப்பான உணர்வுதான் என்னை பயமின்றி நடிக்க வைத்தது. இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

  இந்தப் படம் வெற்றிபெறவில்லை என்றால் உங்களுடைய சினிமா வாழ்க்கை காலியாகிவிடும் என்றெல்லாம் கமெண்ட்ஸ் படித்தேன். அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை. சமீபத்தில் நான் எடுத்த சரியான முடிவு இது. படம் பார்ப்பதற்கு முன்பாகவே அந்தப் படத்தை தீர்மானிக்கும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்காக எதுவும் செய்ய முடியாது. இது ஒரு உண்மையான படம்” என்று கூறியுள்ளார்.

  வீடியோ பார்க்க: ஆஸ்கர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்ற இந்திய இயக்குநர்கள்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sheik Hanifah
  First published: