படப்பிடிப்புக்கு பின் என்னால் தூங்கமுடியவில்லை - காஜல் அகர்வால்

படப்பிடிப்புக்கு பின் என்னால் தூங்கமுடியவில்லை - காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அச்சம் காரணமாக தன்னால் தூங்க முடியவில்லை என்று கூறியுள்ளார் நடிகை காஜல் அகர்வால்

  • Share this:
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெப் தொடர் ‘லைவ் டெலிகாஸ்ட்’. பிப்ரவரி 12-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது. மாந்த்ரீக சக்திகள் நிறைந்த ஒரு வீட்டில் தொலைக்காட்சி தொடர் ஒன்றை படமாக்குவதற்காக காஜல் அகர்வால் உள்ளிட்ட குழுவினர் செல்கின்றனர். அப்பொழுது அங்கு ஏற்பட்ட திகில் அனுபவங்கள்தான் லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் கதை.

இதில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் "நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுத்த இடம் மிக மிக பொருத்தமானது. இயக்குநர் வெங்கட் பிரபுவின் நண்பருடைய வீடு. மலையின் உச்சியில் தனியாக இருந்தது.படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது.

படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்கக் கூட முடியவில்லை. ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்" என்று கூறினார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் வைபவ் ரெட்டி, கயல் ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம், மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: