• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "ரஜினிக்கு தமிழில் எழுத தெரியாது"- சவுந்தர்யா ரஜினிகாந்த்

"ரஜினிக்கு தமிழில் எழுத தெரியாது"- சவுந்தர்யா ரஜினிகாந்த்

சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கியுள்ள hoote எனும் செயலி அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

  • Share this:
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கவுள்ள இந்த செயலி 60 வினாடி ஆடியோக்களை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தனது வாழ்த்து குரல் பதிவின் மூலம், இந்த செயலியை தொடங்கி வைத்தார். மேலும், தாதா சாகிப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் Facebook, Instagram, twitter போல இந்த hoote செயலி பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும்  நடிகர் ரஜினிகாந்த் குரல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போலல்லாமல் யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சவுந்தர்யா ரஜினிகாந்த், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தனது தந்தைக்கு தமிழில் அதிகம் எழுத தெரியாது எனவும், ஒரு முறை குரல் வழியாக செய்தி அனுப்பியதே  இந்த செயலியை உருவாக்க காரணமாக இருந்தது என்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளில 'ஹுட்' வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளம் அனைவருக்குமானது என்ற அடிப்படையில் சமஸ்கிருத மொழியும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் ஹூட் செயலியை பயன்படுத்த முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: