• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பொது முடக்கம் தளர்வு: ரிலீஸ் தேதியை பிடிப்பதில் போட்டியிடும் ஹாலிவுட் படங்கள்

பொது முடக்கம் தளர்வு: ரிலீஸ் தேதியை பிடிப்பதில் போட்டியிடும் ஹாலிவுட் படங்கள்

The Eternals

The Eternals

பொது முடக்கம் தளர்வுக்கு பிறகு புதிய படங்கள் திரைக்கு வரும் நிலையில், ரிலீஸ் தேதியை பிடிப்பதில் ஹாலிவுட் படங்களுக்கு இடையே கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது. 

 • Share this:
  சர்வதேச சந்தையை ஆக்கிரமித்து வைத்துள்ள ஹாலிவுட் படங்களை பொறுத்தவரை மேக்கிங்குக்கு இணையாக அதன் ரிலீஸ் தேதியை திட்டமிடுவதிலும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அப்படி பார்த்து பார்த்து திட்டமிட்ட ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் கனவை ஒட்டுமொத்தமாக தகர்த்துவிட்டது கொரோனா. இந்த நிலையில் அடுத்தடுத்து புது ரிலீஸ் தேதியை பிடிக்க, ஒட்டுமொத்த ஹாலிவுட் ஸ்டுடியோக்களும் தற்போதே ஆயத்தமாகி வருகின்றன.  அந்த வகையில், ஏப்ரலில் வெளியாவதாக இருந்த பீட்டர் ராபிட் இரண்டாம் பாகம் மற்றும் ஜூனில் வெளியாகவிருந்த Wonder Woman 1984 ஆகிய படங்கள் தற்போது ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிபோயுள்ளன.

  பெண் சூப்பர் ஹீரோவை மையப்படுத்தி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Black Widow படம் நவம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் பிரியர்களின் ஆதர்ச படமான Fast and Furious படத்தின் ஒன்பதாம் பாகம் இந்திய ரசிகர்களின் கோடை விடுமுறையை குறிவைத்து இந்த ஆண்டு மே மாதம் வெளியாவதாக இருந்தது. தற்போது படக்குழு அடுத்த ஆண்டு கோடை விடுமுறை வரை காத்திருக்க திட்டமிட்டுள்ளனர்.  கடந்த ஆண்டு வெளிவந்து வசூல் வேட்டை நடத்திய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் The Eternals படம் அடுத்தாண்டு பிப்ரவரிக்கு தள்ளிபோயுள்ளது. சூழலுக்கு ஏற்ப இன்னும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதால் மார்வெல் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

  இந்தியாவில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பதற்கு உடனடி தீர்வு இல்லாததால் அக்சய் குமாரின் சூர்யவன்சி, ரன்வீர் சிங்கின் 83 ஆகிய படங்களின் புதிய ரிலீஸ் தேதியும் கேள்விக்குறியாகி உள்ளது.  திரையரங்குகளுக்கு இணையாக OTT தளத்தில் வெளிவரவும் பல புதிய படங்கள் படையெடுக்கின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஜூன் 19-ம் தேதியும், அமிதாப் பச்சனின் குலாபோ சித்தாபோ ஜூன் 12-ம் தேதியும் வெளிவர தயாராகி வருகின்றன.

  கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் படங்களை எடுப்பதை விடவும் நல்ல ரிலீஸ் தேதியை பிடிப்பதில்தான் திரையுலகில் கடும் போட்டி நிலவுகிறது.

  மேலும் படிக்க...

  ஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு

   


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: