• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹிப்ஹாப் ஆதி யூ டியூப் சேனலை ஹேக் செய்த மர்ம நபர்கள்!

ஹிப்ஹாப் ஆதி யூ டியூப் சேனலை ஹேக் செய்த மர்ம நபர்கள்!

ஆதி

ஆதி

ஹிப்ஹாப் ஆதியின் யூ டியூப் சேனலை ஹேக் செய்த மர்ம நபர்கள் அந்த  சேனலில் இருந்த வீடியோக்களை அழித்துள்ளனர்.

  • Share this:
    பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதியின் யூ டியூப் சேனல் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

    கோவையை சேர்ந்த ஆதி தொடக்கத்தில் ஹிப்ஹாப் இசை மூலம் வெகுஜனங்களை கவர்ந்தார். அவரது ஹிப்ஹாப் ஆல்பங்களுக்கு  ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திரைப்படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார். தனி ஒருவன், அரண்மனை 2, ஆம்பள உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள ஆதி, மீசைய முறுக்கு,  நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என ஹிப்ஹாப் ஆதி பிஸியாக இயங்கி வருகிறார்.  ஹிப்ஹாப் ஆதி தயாரித்து, இயக்கி, இசையமைத்து நடித்துள்ள சிவகாமியின் சபதம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    இதையும் படிங்க:சார்பட்டா பரம்பரை பட நாயகியை கொண்டாடும் திமுக-வினர் - காரணம் என்ன தெரியுமா?




    ஹிப்ஹாப்  தமிழா (Hiphop Tamizha) என்ற பெயரில் யூ டியூப் சேனலை ஆதி நிர்வகித்து வந்தார். அவரது பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை இந்த யூ டியூப் பக்கத்தில் அவர் பதிவேற்றி வந்தார். இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியின் யூ டியூப் பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளனர்.  அந்த யூ டியூப்  சேனலில் இருந்த வீடியோக்களும் அழிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க:  பையனுக்கு கல்யாணம் அம்மா கர்ப்பம்... ஆர்.ஜே.பாலாஜியின் புதிய படம்!


    அண்மையில் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக டிஜிபியின் கவனத்துக்கு கொண்டு சென்றார் குஷ்பு. அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: