தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... வரவேற்ற ஏ.ஆர். ரஹ்மான்...!

ஏ.ஆர் ரஹ்மான்

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில், 9 பேர் கொண்ட குழு தேசிய கல்விக் கொள்கை குறித்து நிறைய பரிந்துரைகள் அளித்துள்ளன. அந்த பரிந்துரைகளை வரைவு அறிக்கையாக , மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டிருந்தார்.

  484 பக்கங்கள் கொண்ட அந்த வரைவு அறிக்கையில், 'இந்தி மொழியைக் கட்டாயாமாக்கவேண்டும். 6-8 வகுப்பு வரையில், கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டும்’ என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

  இந்த அறிக்கை, தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூகவலைதளங்களில் #StopHindiImposition மற்றும் #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது.

  இந்நிலையில், வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதில், இந்தி கட்டாயமல்ல, விருப்பப் பாடமாக இருக்கும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

  மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், “அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல. திருத்தப்பட்டது வரைவு!” என்று கூறியுள்ளார்.  வீடியோ பார்க்க: சூர்யா ஜெயித்த கதை!

  Published by:Sheik Hanifah
  First published: