Home /News /entertainment /

45 வருடங்களில் அதிகமாக வசூலித்த படம் இதுதான் - வெற்றி திரையரங்கம் பெருமிதம்

45 வருடங்களில் அதிகமாக வசூலித்த படம் இதுதான் - வெற்றி திரையரங்கம் பெருமிதம்

திரையரங்கு

திரையரங்கு

1973-ம் ஆண்டு முதல் தற்போது வரை வெளியான படங்களிலேயே அதிகமாக வசூலித்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
    வெற்றி திரையரங்கில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிகம் வசூலித்த படம் குறித்த தகவலை திரையரங்கின் நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ளார்.

    சென்னையின் புறநகர்ப் பகுதியான குரோம்பேட்டையில் கடந்த 1973-ம் ஆண்டிலிருந்து வெற்றி திரையரங்கம் இயங்கி வருகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் 1973-ம் ஆண்டு முதல் தற்போது வரை வெளியான படங்களில் ரஜினிகாந்தின் 2.0 படம் அதிகமாக வசூலித்ததாக திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கௌதமன் கூறியுள்ளார். இந்த வசூல் தொகையில் 3டி கண்ணாடிகளின் வருமானம் சேர்க்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.


    அஜித் ஏன் பொதுவிழாக்களை தவிர்க்கிறார் - சிவா பதில்


    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான இந்தப் படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார், எமி ஜாக்‌ஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். லைகா தயாரிப்பில் 3-டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    சொகுசாக இருக்க கொள்ளையடிக்கும் இளம்சிறார்கள் - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: 2.0 movie

    அடுத்த செய்தி