பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலங்கள், நடிகர், நடிகைகள், என்று பலரை விமர்சித்து சிக்கலில் மாட்டி சிறைக்கு சென்று வந்த மீரா மிதுன் மீது தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணை நிலையில் உள்ளது.
பிரபலமும் நடிகையும், மாடலுமான மீரா மிதுன், கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட மிஸ் சென்னை போட்டியில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதாக கூறி ரூபாய் 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக மீரா மிதுன் மீது குற்றச்சாட்டப்பட்டது.
இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மீரா மிதுனுக்கு எதிராக பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்து விசாரணை நடந்து வருகிறது .இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மீரா மிதுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நான் விஜய்யின் தீவிர ரசிகை.. வாரிசு ஆடியோ லாஞ்சில் ராஷ்மிகா கலகல பேச்சு!
ஆனால், தற்போது நடிகை மீரா மிதுன், வழக்கு விசாரணைகளில் ஆஜராகமல் தலைமறைவாக இருப்பதாகவும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் உள்ளதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தது.
இதனை விசாரித்த நீதிபதி மஞ்சுளா , காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.
மீரா மிதுன் மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.