• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • லால் சிங் சத்தா படத்தில் அமீர்கான், விஜய் சேதுபதி இணைந்து நடிக்காததற்கு இதுதான் காரணமா?

லால் சிங் சத்தா படத்தில் அமீர்கான், விஜய் சேதுபதி இணைந்து நடிக்காததற்கு இதுதான் காரணமா?

அமீர் கான் மற்றும் விஜய்சேதுபதி

அமீர் கான் மற்றும் விஜய்சேதுபதி

அமீர் மற்றும் அத்வைத் இருவரும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு இடமளிக்க கடுமையாக முயன்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த 1994ம் ஆண்டு வெளியான `ஃபாரஸ்ட் கம்ப்' ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது உருவாகி வருகிறது. `லால் சிங் சத்தா' எனப் பெயரிடபட்டுள்ள இந்த படத்தில் அதுல் குல்கர்னி திரைக்கதை எழுதி அமீர் கான் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிப்பதாக தகவல் வெளியானது. 

திரைப்படத்தில் தனது கதா பாத்திரங்களுக்காக தன்னை முழுமையாக வடிவமைத்துக்கொள்ளும் நடிகர்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் (Bollywood superstar Aamir Khan) ஒருவர் என்பதாலும், திரைப்படத்தில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர் மிகவும் திறமைசாலி என்ற காரணங்களால் இந்தப் படத்துக்கு அவர் முக்கியமானவர்.

'வையாகாம் 18 ஸ்டுடியோஸ்' மற்றும் அமீர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அதுல் குல்கர்னி எழுதிய இந்த திரைப்படத்தை, அத்வைத் சந்தன் இயக்கவுள்ளார். எனவே, அமீர் தனது வரவிருக்கும் லால் சிங் சத்தா திரைப்படத்தில் (Laal Singh Chaddha) தென்னிந்திய திரைப்பட நடிகரும், 'மக்கள் செல்வன்', என தமிழக ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதியுடன் (Vijay Sethupathi) இணைந்து பணியாற்றுவார் என்ற செய்தி பரவியபோது, திரைப்பட ஆர்வலர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் சமீபத்தில் விஜய் சேதுபதி, அமீருடன் இந்த திரைபடத்தில் நடிக்க மாட்டார் என்றும், தயாரிப்பில் இருந்து விலகிவிட்டார் என்றும் செய்தி வெளியானது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் அக்டோபர் மாதம் விஜய் சேதுபதி, தான் நடிக்க இருந்த பல படத்துக்கான படப்பிடிப்பை நடத்தவிருந்ததாக ஊடக செய்திகள் தெரிவித்தன. ஆனால் சேதுபதியின் கால அட்டவணைகள் (Call Sheets) மற்றும் முந்தைய படத்திற்கான ஈடுபாடுகள் காரணமாக அவருக்கு புதிய படங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதியதால் பல படங்கள் கைமாறி சென்றுள்ளன. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும், கடந்த 2019 லிருந்து அமீர், லால் சிங் சத்தா வுடனான கதாபாத்திரத்திற்காக சேதுபதியுடன் பலரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' (Times of India) தெரிவித்துள்ளது.

Also read... Bigg Boss Tamil 4 : ஜெயிலிக்கு சென்ற அனிதா சம்பத்... ரியோவுடன் நேரடியாக மோதல்!



"கடந்த ஆண்டு திரைப்படத்தின் இயக்குனர் அத்வைத் சந்தன் (Advait Chandan), அமீர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இந்த படத்தில் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். அமீர் தனது எல்லா திரைப்படங்கள் பற்றி இயக்குனர்களிடம் வெளிப்படையாக பேசுவதாக அறியப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு  நெருக்கமானவர்களைத் தவிர வேறு யாருக்கும் விஜய் சேதுபதியின் பங்கு பற்றி தெரியாது,” என்று ஒரு அறிக்கை கூறியது. ஊரடங்கின் போது கூட அவர்களின் பேச்சுக்கள் சுமுகமாகவும் ஒத்துழைப்புடனும் இருந்தன, ஏனெனில் அவர்கள் படப்பிடிப்பு நடைபெறும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று காத்திருந்தனர். இருப்பினும், தொற்றுநோய் நமக்குத் தெரிந்தபடி எல்லாவற்றையும் மாற்றியது, இதில் நடிகர்களின் படப்பிடிப்பு அட்டவணையும் அடங்கும். 

இப்போது, விஜய் சேதுபதி முந்தைய படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், மேலும் விஜய் சேதுபதி தனது படங்களின் தேதிகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டியிருந்தது. அமீர் மற்றும் அத்வைத் இருவரும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு இடமளிக்க கடுமையாக முயன்றனர், ஆனால் அனைத்து விஷயங்களும் ஒத்துவரவில்லை, இருப்பினும் வருங்காலத்தில் இவர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்படலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: