நடிகை சுலக்ஷனாவின் பிறந்தநாளை கொண்டாடிய கண்ணான கண்ணே சீரியல் குழு!

சுலக்ஷனா

சுலக்ஷனா தனது இரண்டரை வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார்.

  • Share this:
தென்னிந்திய திரையுலகின் மூத்த நடிகை சுலக்ஷனா சமீபத்தில் தனது பிறந்தநாளை தனது சீரியல் குழுவுடன் கொண்டாடியுள்ளார். சீரியல் தொடர்பான படப்பிடிப்பு திட்டமிட்டிருந்ததால், இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் செட்டிலேயே கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை கொண்டாட கண்ணனா கண்ணே படக்குழுவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை நடிகர் பிருதிவிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோ கிளிப்பில், சுலக்ஷனா கேக்கை வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். கொண்டாட்டங்களின் போது நிமேஷிகா ராதாகிருஷ்ணன், அக்ஷிதா போபையா, பப்லூ பிரிதிவீராஜ், ராகுல் ரவி மற்றும் படப்பிடிப்பு குழுவினர் இருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் சுலக்ஷனா தனது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களைப் பெற்றார். சுலக்ஷனா தற்போது கண்ணனா கண்ணே நிகழ்ச்சியில் தனலட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் மீராவாக நிமேஷிகா ராதாகிருஷ்ணன், யுவாக ராகுல் ரவி, கவுதமாக பப்லூ பிருத்விராஜ், யமுனாவாக நித்யா தாஸ், வாசுகியாக ப்ரீத்தி சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தியாக அக்ஷிதா போபையா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
View this post on Instagram

 

A post shared by Babloo Prithiveeraj (@prithiveeraj)


சுலக்ஷனா தனது இரண்டரை வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இவர் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து தமிழ் சீரியல்களில் நடிக்க தொடங்கிய அவர், பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் ராசாத்தி தொடரில் அலமேலுவாகவும், லட்சுமி வந்தாச்சு தொடரில் வள்ளியம்மையாகவும், அரண்மனை கிளி தொடரில் தாயம்மாவாகவும், தேவதையை கண்டேன் தொடரில் மீனாட்சியாகவும் மற்றும் சஹானா தொடரில் பைரவி ஜே.கே.பி.-யாகவும் நடித்துள்ளார். இதுதவிர பல நிகழ்ச்சிகளிலும் இவர் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது, கண்ணான கண்ணே சீரியலில் தனலட்சுமி பாட்டியாக நடித்து வருகிறார்.

Also read... செயற்கை காலுடன் பிரபுதேவா நடிக்கும் பொய்க்கால் குதிரை - பர்ஸ்ட் லுக் வெளியீடு!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறி வருகிறது. இதற்கு காரணம் கடந்த சில வாரங்களாக பரபரப்பான திருப்பங்களுடன் கதை வெளியாகிவருகிறது. முக்கியமான நடிகர் ,நடிகைகள் பலரும் இதில் நடித்து இருந்தாலும் அதிகமான இளம் நடிகர்கள் மற்றும் பிரபலமான நடிகர்கள் இதில் இருப்பதால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.

அப்பா மகளின் பாசம் ஒருபுறம் என்றால் இரண்டாவது அம்மாவாக இருந்தாலும் தன் பிள்ளை போலவே கணவரின் குழந்தையும் பார்க்கும் கேரக்டர் ஆகியவை இந்த சீரியலுக்கு ஒரு சிறப்பு தான். அதுமட்டுமல்லாமல் யுவா , மீராவின் காதலும் பலருக்கும் பிடித்திருக்கிறது. தற்போது தான் இந்த சீரியல் பெரும் பரபரப்பாக திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மீராவின் திருமணம் நடைபெறுமா நடக்காதா என்று சஸ்பென்ஸை கொடுத்து கொண்டிருந்தவர்கள் இப்போ கௌதமுக்கு என்ன ஆச்சு என்று பரபரப்பை கூட்டி இருக்கிறார்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: