"சர்வைவர் to டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2": விரைவில் சின்னத்திரைக்கு வரவுள்ள தமிழ் ஷோக்கள்!

சர்வைவர் ஒரு சாகச அடிப்படையிலான ரியாலிட்டி ஷோ. 'ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

  • Share this:
    கொரோனா பாதிப்பால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகளில் பல்வேறு சிக்கலைகளை சந்தித்த திரைத்துறை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழ் தொலைக்காட்சிகளில் பல புதிய நிகழ்ச்சிகள் அடுத்த சில வாரங்களில் புதிதாக ஆரம்பமாக உள்ளன. அவை என்ன நிகழ்ச்சிகள் என்பதை பின்வருமாறு காணலாம்.

    1. நினைத்தாலே இனிக்கும்

    நினைத்தாலே இனிக்கும் சீரியலில் சித்தார்த்தாக ஆனந்த் செல்வன், சுவாதி, நேஹா ஜா, ஜனனே பிரபு மற்றும் மிதுன் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். கதையின் படி, நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி இனிப்பு விற்பனையாளர் (சுவாதி), சித்தார்த் (ஆனந்த்) மற்றும் தமன்னா (நேஹா) ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றியது. இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 23ம் தேதி அன்று ஜீ தமிழில் திரையிடப்படும்.

    2. சர்வைவர்

    சர்வைவர் ஒரு சாகச அடிப்படையிலான ரியாலிட்டி ஷோ. 'ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சமீபத்திய தகவல்களின்படி, 20 போட்டியாளர்கள் 90 நாட்களுக்கு மேல் குறைந்த ஆதாரங்களைக் கொண்ட ஒரு தீவில் தனியாக விடப்படுவார்கள். போட்டியாளர்கள் ஆடம்பர புள்ளிகளை வெல்லவும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும், எலிமினேஷனில் இருந்து தப்பிக்கவும் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும். அர்ஜுனும், போட்டியாளர்களுடன் தங்கியிருந்து அவர்களுக்கு வழிகாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது.

    3. எங்க வீட்டு மீனாட்சி

    எங்க வீட்டு மீனாட்சி (ஈவிஎம்) சீரியலில் சிதம்பரமாக ஜீவா தங்கவேல், மீனாட்சியாக ஸ்ரீதா சிவதாஸ், சங்கீதா, நீபா, பாவா லட்சுமணன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிகழ்ச்சியின் கதை திருமணத் திட்டதாரர் சிதம்பரம் (ஜீவா) மற்றும் விரிவுரையாளர் மீனாட்சி (ஸ்ரீதா) ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றியது. எங்க வீட்டு மீனாட்சி மூலம் ஜீவா மீண்டும் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி செப்டம்பரில் கலர்ஸ் தமிழில் திரையிடப்படும்.

    4. டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2

    டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 டான்ஸ் ஷோவில் குஷ்பு சுந்தருடன் அவரது அன்பு நண்பரும் தேசிய விருது பெற்ற நடன இயக்குனருமான பிருந்தா கோபால் நடுவர்களாக உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சி செப்டம்பர் தொடக்கத்தில் கலர்ஸ் கலர்ஸ் தமிழில் திரையிடப்படும்.

    5. கயல்

    கயலில் சீரியலில் சஞ்சீவ் கார்த்திக், சைத்ரா ரெட்டி, அபி நவ்யா, இசு ரவிச்சந்திரன், கிரண்மை கண்ணன், அவினாஷ் அசோக், ஃபவாத் சயானி மற்றும் பலர் நடிக்க உள்ளனர். செப்டம்பரில் இதன் வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் முதல் முறையாக சஞ்சீவ் மற்றும் சைத்ரா ஜோடியாக நடிக்க உள்ளனர். சன் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது.

    6. சிங்கப்பெண்ணே

    சிங்க பெண்ணே ரியாலிட்டி ஷோவில் கனிஹா, பிரியதர்ஷினி, ஆஷிகா படுகோன், மதுமிதா, ஹரிப்ரியா மற்றும் கமலேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் கனிஹா மற்றும் கமலேஷ் மீண்டும் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் கதை பெண்களின் அதிகாரத்துவத்தில் கவனம் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சி திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: