முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தியேட்டரில் ரிலீஸாக வரிசை கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்...!

தியேட்டரில் ரிலீஸாக வரிசை கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்...!

திரையரங்குகள்

திரையரங்குகள்

மாஸ்டர் படத்தின் வெற்றி மற்றும் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியதன் காரணமாக பெரிய படங்கள் பலவும் தியேட்டரில் வெளிவர வரிசைக்கட்டி தயாராகி வருகின்றன. 

  • Last Updated :

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றி மற்றும் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாக தேங்கி கிடந்த படங்களை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இறங்கியுள்ளது. இதன் முதல்படியாக ஓடிடி-க்கு செல்லவிருந்த விஷாலின் ‘சக்ரா’ படம் வரும் பிப்ரவரி 19-ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கோடை விடுமுறையை குறிவைத்து ஏப்ரல் 2-ம் தேதி கார்த்தியின் ‘சுல்தான்’ படமும் ஏப்ரல் 9-ம் தேதி தனுஷின் ‘கர்ணன்’ படமும் அடுத்தடுத்த வாரங்களில் திரையை எட்டவுள்ளன.

நேரடி தமிழ் படங்கள் மட்டுமல்லாது தென்னக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கே ஜி எஃப் மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற படங்களும் முன்கூட்டியே  ரிலீஸ் ஆகவுள்ளன. அந்த வகையில் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் அக்டோபர் 13 ஆம் தேதியும் கேஜிஎப் இரண்டாம் பாகம் ஜூலை 16-ஆம் தேதியும் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...RK Nagar | ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

ஏற்கெனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ள ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் இந்த முறை தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் உடல்நிலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கூடிய விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளனது.

இது ஒருபுறமிருக்க ஓடிடி-க்கு விற்கப்பட்ட படங்களையும் திரையரங்குகளில் கொண்டு வரவும் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு விற்கப்பட்ட தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

மொத்தத்தில் கொரோனா பெருந்துயரம் காரணமாக தொய்ந்து கிடந்த தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வரிசைகட்ட தொடங்கியிருக்கிறது.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Master, Tamil Cinema, Theatre