முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Pisasu 2 Movie Update: மிஷ்கினின் பிசாசு 2 -வெளியான புதிய அப்டேட்

Pisasu 2 Movie Update: மிஷ்கினின் பிசாசு 2 -வெளியான புதிய அப்டேட்

பிசாசு 2

பிசாசு 2

2014 இல் வெளியான தனது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

  • Last Updated :

மிஷ்கினின் பிசாசு விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற படம். பாலா இதனை தயாரித்திருந்தார். பேய் என்றால் பழிவாங்கும் என்பதை மாற்றி, அன்புகாட்டும் பேயை இதில் மிஷ்கின் காட்டியிருந்தார். அறிமுக நடிகர் நாகா, மலையாள நடிகை பிரகையா மார்டின் இதில் நடித்திருந்தனர். ராதாரவியின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. 

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது மிஷ்கின் இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதில் இல்லை. எனவே பெயரை தவிர பிசாசுக்கும், இந்த இரண்டாம் பாகத்துக்கும் கதைரீதியாக எந்தத் தொடர்ச்சியும் இல்லை. ஆன்ட்ரியா இதில் பிரதான வேடம் ஏற்றுள்ளார்.

கடந்த டிசம்பரில் பிசாசு 2 படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு கொரோனா மற்றும் ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை மிஷ்கின் தொடங்கியுள்ளார். இதில் புதிதாக இளம் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நமிதா கிருஷ்மூர்த்தி நடித்திருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மிஷ்கின் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பது இது முதல்முறையாகும்

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Andrea Jeremiah, Cinema