• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாஸ்டர் செஃப் ஷோ; 14 போட்டியாளர்கள் யார் யார்? விவரம் உள்ளே!

மாஸ்டர் செஃப் ஷோ; 14 போட்டியாளர்கள் யார் யார்? விவரம் உள்ளே!

மாஸ்டர் செஃப் ஷோ

மாஸ்டர் செஃப் ஷோ

பிரம்மாண்ட அரங்குகளுடன் உலகத் தரம் வாய்ந்த செஃப்களான ஆர்த்தி சம்பத், ஹரீஷ் கௌசிக் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்

  • Share this:
சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் 14 இறுதிப் போட்டியாளர்களின் விவரம் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 40க்கும் மேற்பட்ட நாடுகளில் மிகப்பெரிய ஹிட்டான சமையல் ஷோவான ‘மாஸ்டர் செஃப்’ முதன்முறையாக தமிழில் அறிமுகமாகியுள்ளது. இந்தி மொழியில் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், விஜய் டீவியின் ‘குக் வித் கோமாளி’ ஷோ ஹிட்டுக்கு போட்டியாக ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி சன் டீவியில் களமிறக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த ஷோவுக்கு தொடக்கம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

பிரம்மாண்ட அரங்குகளுடன் உலகத் தரம் வாய்ந்த செஃப்களான ஆர்த்தி சம்பத், ஹரீஷ் கௌசிக் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பல்வேறு தளங்களில் இருந்து பல கட்ட சுற்றுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்ஜினியர், ஆசிரியர், யூ டியூபர், கல்லூரி பேராசிரியர், மாணவர் என 18 வயதில் இருந்து 78 வயது வரை இருக்கும் 24 போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டனர்.

ALSO READ | தொடங்கியது பிக் பாஸ் ஷூட்டிங்! போட்டியாளர்கள் யார் யார்?

அவர்களில் இருந்து 12 பேர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு பிடித்த உணவுகள் சமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில் சிறப்பாக சமைத்த 12 பேர் மற்றும் நடுவர்களின் சாய்ஸாக ஒருவர், தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் சாய்ஸாக ஒருவர் என மொத்தம் 14 பேர் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.



போட்டியாளர்கள் விவரம்;
1) வினய் சுக்லா
2) தாரா ரைன்
3) டி.சி. செல்வா சுனிதா
4) சுமித்ரா ராஜேஷ்
5) சசி ஜி
6) சசி ஆனந்த் ஸ்ரீதரன்
7) நஷூதீன் யூசப்
8) மரியம் ஷாஷியா ஷா
9) கிருத்திகா சிவநேசன்
10) அசோக்குமார்
11)கே. மணிகண்டன்
12) டாக்டர் நித்யா பிராங்ளின்
13) தேவகி
14) ஆர்த்தி சதீஷ்

இவர்கள் அனைவரும் ‘மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ள உள்ளனர். வரும் வாரங்களில் கடினமான சுற்றுகள் மற்றும் பல்வேறு கடுமையான கட்டுபாடுகளுடன் போட்டியில் பங்கேற்கின்றனர். சமையல் அரங்கத்துக்கு அருகிலேயே பொருட்கள் இருக்கும் அறை இருக்கிறது.

ALSO READ |  பிஸி சூட்டிங் ஷெட்யூலில் மகாபலிபுரம் பறந்த நடிகை - நண்பர்களுடன் கொண்டாட்டம்!

இதில் இருந்து என்ன பொருள் வேண்டுமோ அதனை எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஒரு கண்டிஷன் எடுக்கும் பொருளை வீண் செய்யக்கூடாது. சிந்தனை, தோற்றம், சுவை ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாக நடுவர்கள் தெரிவித்துவிட்டனர் என்பதால், அடுத்தடுத்த சுற்றுகளில் நடுவர்கள் இம்பரஸ் செய்து மாஸ்டர் செஃபாக இவர்களில் ஒருவர் வாகை சூட உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: