Home /News /entertainment /

ஒப்புதல் இல்லாமல் நடிகர் சங்கத்தேர்தல் அறிவிப்பு கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஒப்புதல் இல்லாமல் நடிகர் சங்கத்தேர்தல் அறிவிப்பு கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

  • News18
  • Last Updated :
    நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர அனுமதி அளித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக் கூடாது என தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தி உள்ளது.

    தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல், முறையாக நடைபெறவில்லை எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்து எந்த முடிவுகளும் செல்லாது என உத்தரவிட்டார்.

    நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து,மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார் .வாக்காளர் பட்டியல் புதிதாக தயாரிக்க வேண்டும் அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்து வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகள் அதை நிர்வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் நிர்வாகிகள் பதவிக் காலம் முடிந்தும் சங்கத்தை நிர்வகித்து வந்ததாக வாதிடப்படது.

    இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்
    நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

    மேலும், உயர் நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக் கூடாது என தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், சிறப்பு அதிகாரி நியமனத்தை உறுதி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கும் சேர்த்து விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்து மனு மீதான விசாரணையை பிப்ரவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor vishal, Chennai High court, Election, HighCourt, South indian Actors association, Vishal

    அடுத்த செய்தி