HC HAS ORDERED THE REMOVAL OF THE INTERIM BAN IMPOSED ON THE SELVARAGAVAN MOVIE NENJAM MARAPPATHILLAI VIN
நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்...!
நெஞ்சம் மறப்பதில்லை
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நாளை வெளியாக உள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரை படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.
செல்வராகவன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நாளை வெளியாக உள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரை படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.
அந்த மனுவில், என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் தொகையை தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 60 லட்சம் ரூபாயை திரும்பி செலுத்தி விட்டதாகவும், 82 லட்சம் தொகையை வட்டியுடன் வருகின்ற ஜூலை மாதத்திற்கு முன்பு திருப்பி செலுத்த உள்ளதால் படத்திற்கு விதிக்கபட்ட தடையை நீக்க வேண்டும் என்றார்
இதையடுத்து, 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீக்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.