செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!

செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!

நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வருகிற மார்ச் 5-ம் தேதி வெளியாக உள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரை படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வருகிற மார்ச் 5-ம் தேதி வெளியாக உள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரை படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.

அந்த மனுவில், என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2.42 கோடி கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1.75 கோடி ரூபாய் கடனை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள 1.24 கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Also read... Gold Rate | சவரனுக்கு ரூ. 608 குறைந்தது தங்கத்தின் விலை...  இன்றைய நிலவரம் என்ன?

மேலும், தங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய மீதமுள்ள தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: