சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்க்கு நிபந்தனை ஜாமீன்...!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்க்கு நிபந்தனை ஜாமீன்...!

கணவர் உடன் மறைந்த நடிகை சித்ரா

தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், எந்த குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.

கடந்த டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவர் தன் மனுவில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவோ, அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவோ தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என தெரிவித்திருந்தார்.

தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், எந்த குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும், சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது தொலைப்பேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டது..

அதேபோல, சித்ரா தூக்கு போட்டு தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி, சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் ஹேம்நாத்க்கு எதிராக குற்றம் காட்டும் வகையிலான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தார்..

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 60 நாட்களை கடந்தும் ஹேம்நாத் தொடர்ந்து சிறையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

Also read... தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தொகுதி வாரியாக வழங்க வேண்டும் - கே.என்.நேரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததை கருத்தில் கொண்டு ஹேம்நாத்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மறு உத்தரவு வரும்வரை மதுரையில் தங்கியிருந்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்துள்ளார். மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கிலும் கைதாகி உள்ளதால், சிறையிலிருந்து வெளியில் வரமாட்டார் என கூறப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: