நடிகை பானுமதியின் பெயரில் உருவான படத்திற்கு பெயர் மாற்றம்... வழக்கு முடித்து வைப்பு!
பழம்பெரும் நடிகை பானுமதி பெயரில் தயாரிக்கப்பட்ட படத்தின் பெயரை மாற்றுவதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, படத்துக்கு தடை கோரி பானுமதியின் மகன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.
- News18 Tamil
- Last Updated: July 2, 2020, 11:34 AM IST
பழம்பெரும் நடிகை பானுமதி பெயரில் தயாரிக்கப்பட்ட படத்தின் பெயரை மாற்றுவதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, படத்துக்கு தடை கோரி பானுமதியின் மகன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
பழம்பெரும் நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஹைதராபாத்தை சேர்ந்த நார்த்ஸ்டார் எண்டெர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் " பானுமதி ராமகிருஷ்ணா" என்ற தலைப்பில் படம் தயாரித்துள்ளது.
இப்படம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. இப்படம் தனது தாய் நடிகை பானுமதியின் இளமைகால சம்பவங்களை தொடர்புபடுத்தி எடுக்கப்பட்டுள்ளதால், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னையில் உள்ள பரணி ஸ்டூடியோ உரிமையாளரும், பானுமதியின் மகனுமான டாக்டர் பரணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், இப்படத்தில் வரும் காட்சிகள், தனது தாயாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக உள்ளதால், ஒரு கோடியே ஒரு ரூபாயை இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, படத் தயாரிப்பாளர்கள் சார்பில், பிரபலமான பெயருக்கு காப்புரிமை கோரமுடியாது. படத்தின் பெயர் பொதுவான ஒன்றாகும். மனுதாரரின் தாயாரின் வாழ்க்கையை தழுவிய கதையல்ல என்று வாதிடப்பட்டது.Also see... ஆத்தாடி மனசுதான் ரெக்க கட்டி பறக்குதே... பிந்து மாதவியின் நியூ ஆல்பம்!
அடியே அழகே... என் அழகே அடியே... நிவேதா பெத்துராஜின் நியூ ஆல்பம்..!
படம் வரும் வெள்ளியன்று வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், படத்திற்கு தடை விதித்தால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அளவில் பொருள் இழப்பு ஏற்படும்... அதனால் படத்தின் பெயரை வேண்டுமானால் "பானுமதி மற்றும் ராமகிருஷ்ணா" என மாற்றி வெளியிடுவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மனுதாரர் தரப்பும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, வழக்கை நீதிபதி சதீஷ்குமார், முடித்துவைத்து உத்தரவிட்டார்.
பழம்பெரும் நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஹைதராபாத்தை சேர்ந்த நார்த்ஸ்டார் எண்டெர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் " பானுமதி ராமகிருஷ்ணா" என்ற தலைப்பில் படம் தயாரித்துள்ளது.
இப்படம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. இப்படம் தனது தாய் நடிகை பானுமதியின் இளமைகால சம்பவங்களை தொடர்புபடுத்தி எடுக்கப்பட்டுள்ளதால், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னையில் உள்ள பரணி ஸ்டூடியோ உரிமையாளரும், பானுமதியின் மகனுமான டாக்டர் பரணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.