2021ஆம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்றவர் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் கௌர் சாந்து. அப்போது முதல் இப்போது வரையில், பல்வேறு முறையில் பல விவகாரங்களில் இவர் குறித்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
ஹிஜாப் அணிவது குறித்த கருத்தாகட்டும் அல்லது உடலை மையமாக வைத்து கிண்டல் செய்பவர்களுக்கு கொடுக்கும் பதிலடி ஆகட்டும், எப்போதுமே தனது கருத்துக்கள் மூலமாக தனித்து அறியப்படுபவர் ஹர்னாஸ் கௌர் சாந்து. இத்தகைய சூழலில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரை, நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர்.
அதாவது, லேக்மீ ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஒய்யாரமாக நடந்து வந்தார் ஹர்னாஸ் சாந்து. அப்போது, ‘ஸ்பெஸியா மைக்ரோ வெல்வெட் கௌன் மற்றும் கிரிஸ்மேஷ் ஹால்டர் அசென்ட்ஸ்’ ஆடையை அவர் அணிந்திருந்தார். ஜான் ஜேக்கப்பின் ஐ வியருடன் இதை சேர்த்து அணிருந்தார் அவர்.
ஃபேஷன் நிகழ்ச்சியில் ஹர்னாஸின் தோற்றம் மற்றும் அவரது நடை என்பது நிச்சயமாக ஃபேஷன் லவ்வர்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம் அல்லது பிடிக்காமல் கூட போகலாம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றது குறித்த படங்கள் ஹிட் அடித்ததுமே, அவரது உடல் எடையை சுட்டிக் காட்டி நெட்டிசன்கள் டிரோல் செய்யத் தொடங்கி விட்டனர்.
உடல் எடை குறித்து நெட்டிசன்கள் ஒருபுறம் கிண்டல் செய்து கொண்டிருக்க, அதற்கு முறையான பதில் கொடுத்தார் ஹர்னாஸ் கௌர் சாந்து. அதாவது தனக்கு ‘சீலியாக் நோய்’ இருப்பதாகவும், ஆகவே குளூட்டென் வகை சத்துப் பொருள் தமக்கு அலர்ஜியை கொடுக்கும் என்றும் அவர் கூறினார். பஞ்சாபில் பிறந்த ஹர்னாஸ் சாந்துவுக்கு இயல்பாகவே கோதுமை, பார்லி போன்ற உணவுப் பொருள் மூலமாக அபரிமிதமாக கிடைக்கும் ஒருவகை புரதச் சத்து அலர்ஜியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும் குளூட்டன் சத்து என்பது கோதுமையில் அதிகமாக உள்ளது.
Also Read : வில்லங்கமான வேடத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய நடிகை
சீலியாக் நோய் என்றால் என்ன?
சுயநோயெதிர்ப்பு நிலை என்பதையே சீலியாக் நோய் எனக் குறிப்பிடுகின்றனர். இந்த பாதிப்பு ஒருவருக்கு இருந்தது என்றால், அவரது நோய் எதிர்ப்பு சக்தியே சொந்த உடலுக்கு எதிராக செயல்படும். குறிப்பாக, குளூட்டென் சத்து நிரம்பிய உணவுப் பொருட்களை நீங்கள் சாப்பிடும்போது, இந்தப் பிரச்சினை தாமாகவே வெடித்துக் கிளம்பும்.
Also Read : அரபிக் குத்து பாடலுக்கு பாலிவுட் பிரபலங்கள் அட்டகாச நடனம்!
சீலியாக் நோயின் எதிரொலியாக எலும்பு அடர்த்தி குறைவு, குழந்தையின்மை பிரச்சினை, நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் சில சமயங்களில் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும். இந்த நோய் குறித்து வெகுஜன மக்களிடம் பெரிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. இதனால், நோய் முற்றிய நிலையில் தான் இதுகுறித்து பலருக்கு தெரிய வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.