இணைய தொடரில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

news18
Updated: August 10, 2018, 4:41 PM IST
இணைய தொடரில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்
news18
Updated: August 10, 2018, 4:41 PM IST
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்குபெறும் புதிய இணைய தொடர் வெளியாகவுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம், விஜய்யின் சர்கார் ஆகிய படங்களுக்கு தற்போது இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் சிவகார்த்திகேயனின் படத்துக்கும் இசையமைக்கிறார்.

இந்நிலையில் அமேசான் பிரைம் தளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்குபெறும் புதிய தொடர் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ’ஹார்மனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொடரில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா முழுக்க பயணிக்கிறார். அந்த பயணத்தில் இசையில் புதிய திறமையாளர்களை சந்திக்கும் அவர் இசைக்கருவிகள் குறித்தும் பேசவுள்ளார். வட இந்தியாவின் முக்கிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இசைக்கலைஞர்களுடன் உரையாடுவது இந்த தொடரில் இடம் பெறும்.

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் இதுபோன்ற தொடர்களுக்கு தனிக்கட்டணங்கள் உண்டு. கணினி, ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றை பயன்படுத்தி அமேசான் வீடியோக்களைக் காண முடியும். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த இணைய தொடருக்கான விளம்பர வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...