ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மற்றவர்களுக்குத்தான் நான் இசைஞானி... எனக்கு இல்லை! – இளையராஜா

மற்றவர்களுக்குத்தான் நான் இசைஞானி... எனக்கு இல்லை! – இளையராஜா

 இந்த விருதில் ரூ. 1,00,000, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

 இந்த விருதில் ரூ. 1,00,000, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை கேரளா அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ‘ஆர்மோனிய பெட்டி மட்டுமே எனது நண்பன்’ என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

  இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், இளையராஜா பங்கேற்றுப் பேசியதாவது: என்னிடம் நண்பர்களாகப் பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. ஆர்மோனிய பெட்டி மட்டுமே எனது நண்பன். பல காலத்துக்கு முன்பு, கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் 60 ரூபாய்க்கு இந்த ஆர்மோனிய பெட்டியை வாங்கினேன்.

  உண்மையில், இது விலைமதிப்பற்ற பொருள். இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும், அவை வெறும் மாயத்தோற்றம் மட்டுமே. இசையில் அனைத்து செல்வங்களும் இருக்கின்றன. அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். இசைக்கு வெற்றி, தோல்வியே கிடையாது. குறிப்பாக மாணவர்கள் இசையில் வெற்றி தோல்வி என்பதை கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது.

  மற்றவர்களுக்குத்தான் நான் இசைஞானி. எனக்கு நான் இன்னமும் இசைஞானி இல்லை. உண்மையில், நான் இளையராஜாவே இல்லை. நன்றாக பாடியதற்காக ஓரே ஒரு பாட்டிற்கு மட்டுமே பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நான் பாராட்டியிருக்கின்றேன். அது ஒரு தெலுங்கு பாடல்.

  பாடல் பாடும் எல்லாருக்கும் ஓரே மாதிரியான அறிவுரையை கூற முடியாது. நான் எதிர்பார்த்தபடி இதுவரை பாடல்கள் எதுவுமே அமைந்ததில்லை.

  எல்லாப் பாடல்களுமே எனக்கு ஆன்மீகப் பாடல்கள்தான். ஒரு பாடல் நல்ல கருத்தையும், உணர்வையும் கொடுக்க வேண்டும். அவை இல்லை என்றால் அது பாடல் இல்லை என்றார் இளையராஜா.  தொடர்ந்து இசையின் நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கிய இளையராஜா, அவர்கள் விரும்பிய பாடல்களை பாடினார்.

  மேலும் வீடியோ பார்க்க...

  Published by:DS Gopinath
  First published:

  Tags: Ilayaraja, Ilayaraja 75th birthday, Ilayaraja songs