முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினியின் தளபதி லுக்கில் ஹரிஷ் கல்யாண்... கவனம் பெறும் ‘ஸ்டார்’ ஃபர்ஸ்ட் லுக்

ரஜினியின் தளபதி லுக்கில் ஹரிஷ் கல்யாண்... கவனம் பெறும் ‘ஸ்டார்’ ஃபர்ஸ்ட் லுக்

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாக இருக்கும் ‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின், ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ பியார் பிரேமா காதல்’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா உள்ளிட்டோர் நடிக்க இளன் இயக்கினார்.

யுவன் இசையில் படத்தின் பாடல்கள் ஒருபுறம் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. இந்த வெற்றிக்கு பரிசாக தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, படத்தின் இயக்குநர் இளனுக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தார். இந்நிலையில் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ‘ஸடார்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அதில் தளபதி திரைப்படத்தின் ரஜினிகாந்த் லுக்கில் தோன்றியுள்ளார் ஹரிஷ் கல்யாண். எனவே ரசிகர்களிடமும் திரை பிரபலங்களிடமும் இந்த போஸ்டர் கவனம் பெற்று வருகிறது.

‘ஸ்டார்’ திரைப்படத்தில் ஹீரோவின் குழந்தைப்பருவம், இளமை உள்ளிட்ட 3 காலங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஹரிஷ் கல்யாண் உடன் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியிருப்பதால் அவரைப்பற்றி நன்கு தெரியும் என்பதாலும் அவருடன் மீண்டும் இணைந்திருப்பதாக இளன் கூறியுள்ளார்.

மேலும் இந்தப் படம் ஒரு மியூசிகல் ஃபிலிம் என்பதால் பியார் பிரேமா காதல் திரைப்படத்தை விட அதிக பாடல்கள் இருக்கும் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

top videos

    இந்தப் படத்தின் படப்பிடிப்பை மும்பை, சென்னை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஷூட்டிங் செல்ல உள்ளதாகவும் தெரிகிறது.

    First published:

    Tags: Harish Kalyan, Kollywood, Yuvan Shankar raja