• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நட்பை மையப்படுத்திய படத்தில் ஹீரோவாகும் ஹர்பஜன் சிங் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நட்பை மையப்படுத்திய படத்தில் ஹீரோவாகும் ஹர்பஜன் சிங் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

  • Share this:
    ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரரும், தீவிர ரசிகர்களைக் கொண்ட சிஎஸ்கே அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் ட்வீட்களைப் பதிவு செய்வார். அதற்கு ரசிகர்களும் ஏராளம்.

    இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்தப் படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங்.

    இந்நிலையில் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபிரெண்ட்ஷிப் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் ஹர்பஜன் சிங், நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம், இணைய தொடர். இன்று ஃபிரெண்ட்ஷிப் படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப்பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் தலைவர் தல - தளபதி சின்னாளப்பட்டி சரவணன். அசத்துவோம்” என்று கூறியுள்ளார்.



    விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: இது புதுசு... மிரட்ட வரும் புதிய கூட்டணி - தனுஷ் நடிக்கும் 43-வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: