• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரஜினி, கமல், அஜித், விஜய்... ஒரு பால்ல 4 விக்கெட் எடுத்த ஹர்பஜன் சிங்!

ரஜினி, கமல், அஜித், விஜய்... ஒரு பால்ல 4 விக்கெட் எடுத்த ஹர்பஜன் சிங்!

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

  • Share this:
    ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரின் படங்களை தொடர்புபடுத்தி ஐபிஎல் குறித்து ஹர்பஜன் சிங் போட்ட ட்வீட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் சீசன் ஆரம்பித்துவிட்டால் போதும் இவரின் தமிழ் ட்வீட்கள் அதிகமாகிவிடும். இவரது தமிழ் ட்வீட்களுக்காகவே தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

    இந்த ரசிகர் பட்டாளத்தை வைத்து தமிழ் சினிமாவிலும் நாயகனாக நடித்து வருகிறார் ஹர்பஜன் சிங். சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹர்பஜன், ஃபிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார்.

    இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்னை வந்திருக்கும் ஹர்பஜன் சிங்கின் சமீபத்திய ட்வீட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த ட்வீட்டில் ஹர்பஜன் சிங் கூறியிருப்பதாவது, வந்து இறங்கியிருக்குற இடம் சென்னை ஐபிஎல். இந்த ஐபிஎல் நம்ம டீம் செம ‘வலிமை’ மாப்பி. ‘தளபதி’ ஸ்டைல்ல ‘தல’ எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெர்ல. ‘அண்ணாத்தை’ பார்த்து ஆட முடியுமான்னு கேள்வி செயக்கை வேற ரகமா இருக்கபோது. சேபாக் நம் ‘தலைவன்இருக்கிறான்’ மயங்காதே விசில் போடு சிஎஸ்கே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்த ட்வீட்டில் விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் வலிமை, ரஜினிகாந்தின் அண்ணாத்த, கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் ஆகிய பட டைட்டில்களை தொடர்புபடுத்தியிருப்பதால் ஒரே பாலில் 4 விக்கெட் எடுப்பதைப் போல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது ஹர்பஜனின் ட்வீட்.

    மேலும் படிக்க: சூரரைப் போற்று படத்தின் ‘மண்ணுருண்ட’ பாடல் ரிலீஸ்!




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: