லாஷ்லியாவை லவ் பண்றேன்னு சொன்னியே மச்சி - வத்தி வெச்ச ஹர்பஜன் சிங்

லாஸ்லியா - ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷின் ட்விட்டர் உரையாடல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.

  • Share this:
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா. வில்லனாக பிரபல நடிகர் அர்ஜூனும், நகைச்சுவை கேரக்டரில் சதீஷூம் நடிக்கின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய ஹர்பஜன் சிங் தனது தமிழ் ட்வீட்டுகளால் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இந்நிலையில் ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக ஹர்பஜன் சிங்கும் வில்லனாக அர்ஜூனும் நடித்து வருவதால் படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பிக்பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற லாஸ்லியாவையும் திரையில் காண அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃப்ரெண்ட்ஷிப் படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் நடிகர் சதீஷ் ஃபிரெண்ட்ஷிப் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, என்றும் தொடரும் இந்த நட்பு. லவ் யூ ஹர்பஜன், லாஸ்லியா என குறிப்பிட்டிருந்தார்.சதீஷின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகர் ஹர்பஜன் சிங், “மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற நீ லாஸ்லியாவை தான லவ் பன்றேன்னு சொன்ன. அன்னிக்கு இந்த விஷயம் தெரியுமா ?? நம் நட்பு என்றும் தொடரும் தோழா” என்று கூறினார். இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகர் சதீஷ், “அய்யய்யோ எனக்கே இந்த விஷயம் இப்பதான தெரியும். லாஸ்லியாவை ஒரு தோழியாக லவ் யூ என்று சொன்னேன்” என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங் - நடிகர் சதீஷ் இடையேயான் இந்த நகைச்சுவையான ட்விட்டர் பதிவிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: