Home /News /entertainment /

மிஸ் பண்ணக் கூடாத விஜய் சேதுபதியின் 5 படங்கள்!

மிஸ் பண்ணக் கூடாத விஜய் சேதுபதியின் 5 படங்கள்!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் சமமான நீதியைச் செய்து அற்புதமான நடிகராக திகழ்கிறார் விஜய் சேதுபதி.

    ஜனவரி 16-ம் தேதியான இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கியப் பங்காற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாள். குறுகிய காலத்திற்குள் பன்முகத் திறமை வாய்ந்த நடிகராக தன்னை நிரூபித்து, அவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மையை நிலை நாட்டியுள்ளார். இந்த சிறப்பான நாளில், தனது அசாதாரண நடிப்பால் நம்மை கவர்ந்த விஜய் சேதுபதியின் சில படங்களைப் பார்ப்போம்.

    சூப்பர் டீலக்ஸ்: தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில், விஜய் சேதுபதி தனது சிறந்த நடிப்புகளில் ஒன்றை வழங்குகியிருந்தார். யதார்த்தத்தில் ஆழமாக வேரூன்றிய கதாபாத்திரங்களைப் பற்றிய அந்தப் படத்தில், விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடித்திருந்தார். ஷில்பாவின் கோபம், ஏக்கம், பாசம் ஆகியவற்றை மிக அழகாக திரையில் காட்டியிருந்தார் சேதுபதி.

    சூது கவ்வும்: இயக்குநர் நளன் குமாரசாமி இயக்கிய இந்த பிளாக் கமெடி திரில்லர் திரைப்படத்தில், விஜய் சேதுபதி தனது மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். இந்த ஹிட் படத்தின் மூலம், அவர் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்றார். மனசாட்சியுடன் கூடிய கடத்தல்காரனாக தியேட்டரில் அப்ளாஸ்களை அள்ளினார்.

    சேதுபதி : தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் சமமான நீதியைச் செய்து அற்புதமான நடிகராக திகழ்கிறார் விஜய் சேதுபதி. அவர் தனது நடிப்பு திறனை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார். உதாரணமாக, இந்த படத்தில், ஒரு போலீஸ் அதிகாரியாக நேர்மையான, இதயத்தைத் தூண்டும் சித்தரிப்பு வெகுஜன மக்களின் இதயங்களை வென்றது. சிங்கம் படத்தை ஒத்த சேதுபதி - அருண்குமார் இயக்கிய ஆக்‌ஷன்-த்ரில்லர் படம். இது விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை இன்னும் உண்மையானதாகக் காட்டுகிறது. சேதுபதி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

    நானும் ரவுடி தான்:
    இந்த நகைச்சுவை படம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது. நயன்தாராவை வைத்து, விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நட்சத்திர நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. அவரது கதாபாத்திரம் படத்தை ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்காக மாற்றியது.

    பீட்சா: நாடகம் அல்லது குற்றம் அல்லது நகைச்சுவை அல்லது திகில் என எதுவாக இருந்தாலும், விஜய் சேதுபதி அனைத்திலும் சமமாக சிறந்து விளங்குகிறார். அவரது அற்புதமான நடிப்பு வலிமைக்கு மீண்டும் சாட்சியமளித்த பீட்சா, விஜய் சேதுபதியை நட்சத்திரமாக மாற்றியது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் பெங்காலி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தேசிய அளவில் விஜய் சேதுபதிக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

    இதுபோல் இன்னும் நிறைய சிறந்த படங்களை விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor vijay sethupathi

    அடுத்த செய்தி