Home /News /entertainment /

Happy Birthday Rajinikanth | 30 ஆண்டுகளாக திரையுலகில் ரஜனிகாந்த் பேசிய அரசியல் வசனங்கள்

Happy Birthday Rajinikanth | 30 ஆண்டுகளாக திரையுலகில் ரஜனிகாந்த் பேசிய அரசியல் வசனங்கள்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் அரசியல் கட்சியை துவங்க உள்ளதாக அறிவித்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக திரை உலகில் ரஜினிகாந்த் பேசிய அரசியல் வசனங்களின் தொகுப்பை தற்பொழுது பார்க்கலாம்.

  • Last Updated :
    நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாற தொடங்கியவுடன் ரஜினியை சுற்றி அரசியல் மேகம் சூழத் தொடங்கியது. அரசியலில் இருந்து விலகி இருக்க விரும்புவதாக பலமுறை கூறிய ரஜினிகாந்த் ராஜாதி ராஜா திரைப்படத்தில் கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம் என பாடலாகவும் அதனை பாடியிருப்பார்.

    இதையே 1995ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முத்து திரைப்படத்திலும் குலுவாலிலே முத்து வந்தல்லோ என்ற பாடலில் கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு என மீண்டும் ஒருமுறை படினார்.

    ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட பிறர் அழைப்பது போல சில வசனங்களும் அவ்வப்போது திரைப்படங்களில் வைக்கப்பட்டது. படையப்பா திரைப்படத்தில் ரஜினியின் நிஜ நண்பரான ராஜ்பகதூர் அரசியல் கதாபாத்திரத்தில் தோன்றி ரஜினிகாந்தை அரசியலில் ஈடுபட அழைப்பார். அதற்கு ரஜினிகாந்த் காலத்தின் கையில் முடிவு இருப்பதாக கைகளை மேலே உயர்த்தி பதிலளிப்பார்.

    1995ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் நடிகர் ரஜினிகாந்திற்குமிடையே நேரடி மோதல்கள் தொடங்கியிருந்தன. இந்த காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களில், என் வழியில் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்ற வசனத்தை ரஜினிகாந்த் அடிக்கடி பேசினார். முத்து திரைப்படத்தில் நடிகை மீனாவிடம் ரஜினிகாந்த் பேசிய இந்த வசனம், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்று அன்றைய தேதியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

    இதேபோல 1992ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலை திரைப்படத்திலும் இதே வசனத்தை அரசியல்வாதி கதாபாத்திரத்தில் தோன்றிய வினுசக்ரவர்த்தி இடம் ரஜினிகாந்த் பேசுவார்.

    இதேபோல அரசியல்வாதிகளுக்கு ரஜினி கொள்கை குறித்த பாடம் எடுக்கும் காட்சிகளும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது இடம்பெற்றுள்ளன. அண்ணாமலை திரைப்படத்தில் வினு சக்கரவர்த்தியிடம் அரசியல்வாதியின் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் பேசியிருப்பார்.

    இதேபோல பாபா திரைப்படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரத்துடன் பேசும் ரஜினிகாந்த் சிஎம் ஆவது எவ்வளவு கடினம் என விளக்குவார்.ஆனாலும் அதே பாபா திரைப்படத்தில் ரஜினிகாந்தை சி எம் ஆக வேண்டும் என நடிகர் கவுண்டமணி வலியுறுத்துவார்.

    ரஜினிகாந்த் திரைப்படங்களில் இத்தனை அரசியல் வசனங்கள் பேசி இருந்தாலும் முத்து திரைப்படத்தில் பேசிய எப்போ வருவேன் எப்படி வருவேன் என்ற வசனம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் நாள் வரை ரஜினி ரசிகர்கள் அரசியலில் ரஜினி எதிர்பார்க்க முக்கிய காரணமாக மாறியது.

    ராஜாதி ராஜா திரைப்படம் முதல் கபாலி திரைப்படம் வரை 30 ஆண்டுகாலம் ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகி இருக்க நினைத்தாலும் விடாமல் திரைப்படங்களிலும் அவரை அரசியல் வசனங்கள் துரத்தியது என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது அரசியலை விட்டு தூர விலகி விடாமல் இருக்க அரசியலை தன் வசனங்களால் ரஜினி துரத்த செய்தார் என்றும் கூட சொல்லலாம்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி