ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சின்ன சின்ன ஆசை.. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று!

சின்ன சின்ன ஆசை.. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று!

ரஹ்மான்

ரஹ்மான்

A R Rahman : இந்தியாவின் ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

90 களில் தமிழ் திரையில் மையம் கொண்ட ஓர் இசைப்புயல் பாலிவுட்டில் சுறாவளியாக சுழன்று பின் உலக அரங்கில் தடம் பதித்தது. தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை பெற்று, சர்வதேச அரங்கில் தன் பெயரை பதித்த அந்த இசைப்புயல்தான் ஏ.ஆர்.ரஹ்மான். கணினி பொறியாளர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த ஏ.ஆர் ரஹ்மானை இசையின் பக்கம் திருப்பியது அவரது தந்தையின் மரணம். மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படத்தில் தன் முதல் இசை பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் அதன் பின் செய்தது அனைத்தும் மாயா ஜாலமே. ‘காதல் ரோஜாவே’ பாடலையும்.. ‘சின்ன சின்ன ஆசை’ பாடலையும் கேட்ட இசை ரசிகர்கள் அவரின் இசையில் வழிந்த சப்தங்களில் கரைய தொடங்கினர்.

திருடா திருடா, ஜெண்டில்மேன், பம்பாய் என அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை மதி மயங்க வைத்தார் ஏ.ஆர். ரஹ்மான். புகழின் உச்சத்தில் நிறுத்திய இப்பாடல்கள், அவரை தமிழ் சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளராகவும் ஆக்கின.ஏ.ஆர். ரஹ்மானை இரு கரம் கொண்டு வாரிஅணைத்தது பாலிவுட். ரங்கீலா முதல் இப்போது வரை பாலிவுட் முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான் உயிர். இந்தியாவின் 50-வது ஆண்டு சுதந்திர நாளைஒட்டி ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'வந்தே மாதரம்' இசைத் தொகுப்பு இன்றுவரை ஓயவில்லை. மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்களுக்கு தேசியவிருதுகள் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் உலகளவில் பிரமிக்க வைத்தார்.

ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் பிரபலமாக ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் முக்கிய காரணமானது. டானி பாயில் என்ற ஹாலிவுட் இயக்குநர் எடுத்த ‘ஸ்லம்டாக் மில்லினர்’ எனும் ஆங்கிலப் திரைப்படத்திற்கு இசை அமைத்ததற்காக, இரு ஆஸ்கார் விருதுகளை வெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், உலகளவில் இந்திய இசையை கொண்டு சென்றார். அந்த மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் உலக அரங்கில் பல கோடி ரசிகர்களை ஈர்த்துள்ளார். பொன்னியின் செல்வனின் வாள் வீச்சையும் வென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, இந்திய இசை வரலாற்றில் பிரத்யேக பக்கங்களை சொந்தம் கொண்டாடிவருவதாகவே கூறலாம்.

First published:

Tags: A.R.Rahman