• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கையில் துப்பாக்கி... ரத்த வெள்ளத்தில் மிதக்கும் ஹன்சிகா

கையில் துப்பாக்கி... ரத்த வெள்ளத்தில் மிதக்கும் ஹன்சிகா

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா

கையில் துப்பாக்கியுடன் அவர் பாத் டப்பில் ரத்தத்தில் குளிப்பது போல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகை ஹன்சிகாவின் 50-வது படமான மஹா படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை ஹன்சிகா நடிக்கும் 50-வது படமாக உருவாகியுள்ளது மஹா. இப்படத்தை இயக்குநர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா, விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மஹா படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ் வெளியிட்டிருந்தார்.



முன்னதாக அவர் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்தப் புகைப்படத்தை எதிர்த்து இயக்குநர் ஜமீல் மற்றும் ஹன்ஷிகா மீது வழக்கு தொடரப்பட்டது

Hansika | Maha Movie Poster
ஹன்ஷிகாவின் மஹா பட போஸ்டர்


தற்போது படத்தின் மற்றொரு போஸ்டர் ஹன்சிகா தனது ட்விட்டர் பகத்தில் பதிவிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் அவர் பாத் டப்பில் ரத்தத்தில் குளிப்பது போல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.



மேலும் பார்க்க : #VIJAYSETHUPATHI25 | விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Prabhu Venkat
First published: