ஹன்சிகாவின் 50 வது படமாக தயாராகியுள்ள மஹா படத்தின் டீஸரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.
ஹன்சிகா வின் 50 வது படமான மஹா பல வருடங்கள் முன்பே வெளியாகியிருக்க வேண்டும் . தயாரிப்பாளரின் பொருளாதார நெருக்கடியால் பலமுறை படப்பிடிப்பு தடைபட்டு , தற்பொழுது ஒருவழியாக தயாராகியுள்ளது . நடுவில் இயக்குனர் ஜமீலுக்கும் , தயாரிப்பாளருக்கும் பிரச்சனையாகி , என்னை புறக்கணித்து வேறொருவரை வைத்து படத்தை முடித்து , ஓடிடியில் வெளியிட பார்க்கிறார் என ஜமீல் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுக்கும் அளவுக்கு விஷயம் கைமீறியது . இத்தனைக்கும் நடுவில் ஹன்சிகா எதுவும் பேசாமலே பிரச்சனைகளை கடந்தவிதம் கூல் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மஹாவில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் . கோவாவில் ஹன்சிகா - சிம்பு சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்றும் எடுக்கப்பட்டது . இந்நிலையில் , நாளை மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் மஹா டீஸரை வெளியிடுவார் என ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
Also read... Dhanush: OTT தளங்களில் ரிலீசாகி உள்ள நடிகர் தனுஷின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகிறது . ரசிகர்கள் படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று சமூகவலைதளத்தில் போர்க்கொடி தூக்கியும் பிரயோஜனமில்லை . அயலான் , டான் படங்கள் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகும் என்பது மட்டும் ஆறுதல் .
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by: Vinothini Aandisamy
First published: July 01, 2021, 18:31 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.