• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்துவில் இருந்து இஸ்லாத்துக்கு மாறிய நடிகை ஹன்ஷிகா!!

இந்துவில் இருந்து இஸ்லாத்துக்கு மாறிய நடிகை ஹன்ஷிகா!!

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்ஷிகாவின் 50-வது படமான மஹா படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகை ஹன்சிகாவின் 50-வது படமான மஹா படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகை ஹன்ஷிகா நடிக்கும் 50-வது படமாக உருவாகியுள்ளது மஹா. இந்தப் படத்தை யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் ஹன்ஷிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது. இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

மஹா பட போஸ்டர் விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பைச் சேர்ந்த நாராயணன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்து மதத்தில் இருக்கும், பெண் துறவிகளை அவமதிக்கும் வகையில் ஹன்சிகாவின் மஹா பட போஸ்டர் அமைந்துள்ளது. எனவே இதுதொடர்பாக நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்த நிலையில் தற்போது படத்தின் 2-வது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் இஸ்லாமிய பெண்ணாக நடிகை ஹன்சிகா தோன்றியுள்ளார். மேலும் போஸ்டரில் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொல்வது போல ஹன்சிகா தோன்றியிருப்பதற்கும் விமர்சனம் எழுந்துள்ளது.



முன்னதாக படத்தின் போஸ்டர் குறித்து விளக்கம் அளித்திருந்த படத்தின் இயக்குநர் ஜமீல், "ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சாதி அல்லது மதம் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. நான் இந்து, முஸ்லிம் என்பதைவிட மனிதம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். புகைப்பிடிக்கும் படத்தை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். தயவு செய்து சாதி, மத கோணத்தில் இதை அணுக வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

சுனாமி நினைவு தினம் இன்று - வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: