• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹன்சிகா மீது கமிஷனர் அலுவலகத்தில் திடீர் புகார்.

ஹன்சிகா மீது கமிஷனர் அலுவலகத்தில் திடீர் புகார்.

ஹன்சிகா

ஹன்சிகா

மஹா பட போஸ்டர் விவகாரம் தொடர்பாக படத்தின் இயக்குநர் மற்றும் நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மஹா பட போஸ்டர் விவகாரம் தொடர்பாக படத்தின் இயக்குநர் ஜமீல் மற்றும் நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ஹன்ஷிகா நடிக்கும் 50-வது படமாக உருவாகியுள்ளது மஹா. இந்தப் படத்தை யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் ஹன்ஷிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது. இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தப் புகைப்படத்தை எதிர்த்து பா.ம.க பிரமுகர், படத்தின் இயக்குநர் ஜமீல் மற்றும் ஹன்ஷிகா மீது வழக்கு தொடர்ந்தார். அதில், மஹா படத்தின் போஸ்டர் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

    Hansika | Maha Movie Poster

    இந்த நிலையில் மஹா போஸ்டர் விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பைச் சேர்ந்த நாராயணன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்து மதத்தில் இருக்கும், பெண் துறவிகளை அவமதிக்கும் வகையில் ஹன்சிகாவின் மஹா பட போஸ்டர் அமைந்துள்ளது. எனவே இதுதொடர்பாக நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    முன்னதாக படத்தின் போஸ்டர் குறித்து விளக்கம் அளித்திருந்த படத்தின் இயக்குநர் ஜமீல், "ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சாதி அல்லது மதம் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. நான் இந்து, முஸ்லிம் என்பதைவிட மனிதம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். புகைப்பிடிக்கும் படத்தை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். தயவு செய்து சாதி, மத கோணத்தில் இதை அணுக வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

    நள்ளிரவில் நடுரோட்டில் அழுது புலம்பிய மலையாள நடிகை - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: