உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திடம் பேசி ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தாரா? ரஜினி தரப்பு விளக்கம்

சாத்தான்குளத்தில் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் ரஜினிகாந்த் பேசவில்லை என்று சமூக வலைதளங்களில் வைரலானநிலையில் ரஜினிகாந்த் தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திடம் பேசி ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தாரா? ரஜினி தரப்பு விளக்கம்
ரஜினிகாந்த்
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ் ஆகியோரின் குடும்பத்தாருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் என்ற செய்தி ஊடகம் வாயிலாக வெளியானது.

உயிரிழந்த ஜெயராஜின் மூத்த மகள் பெர்சியிடம் தொலைபேசி மூலம்பேசிய ரஜினிகாந்த், ’இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து குடும்பம் மீண்டு வர வேண்டும். இந்த சம்பவத்தில் தவறு இழைத்தவர்கள் நீதித்துறையால் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்’ என்று பேசியதாக செய்திகள் வெளியானது.

முதலில் இந்த தகவலை நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் கராத்தே தியாகராஜன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். பின்னர் நடிகர் ரஜினிகாந்தின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.


ஆனால் ரஜினிகாந்த் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் தொலைபேசி வாயிலாக பேசவே இல்லை. தவறான தகவலை ஊடகங்கள் பரப்புவதாக சமூக ஊடகத்தின் பரவின.

இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் மீண்டும் விசாரித்தபோது,’ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக பேசியது உண்மைதான்.
அவர் குறித்த பொய்யான செய்திகள்  திட்டமிட்டு ஒரு சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. உண்மை செய்திகளை ஊடகங்கள் வெளிப்படுத்துவதாகவும் ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading