Home /News /entertainment /

’Anti - Indians-க்கு’ சமர்ப்பணம்... வெளியானது ’வெரி வெரி பேட்’ பாடல் வீடியோ!

’Anti - Indians-க்கு’ சமர்ப்பணம்... வெளியானது ’வெரி வெரி பேட்’ பாடல் வீடியோ!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ராஜூ முருகன், இந்தப் படம் முழுக்க முழுக்க அரசியல் படம் இல்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ஜிப்ஸி படத்தின் முதல் பாடலான 'வெரி வெரி பேட்' பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் ஜீவாவை வைத்து இயக்கும் படம் ஜிப்ஸி. இந்தப் படத்தில் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் நடாஷா சிங், ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடலான வெரி வெரி பேட் பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அரசுக்கு எதிராக எதிராக போராடுபவர்களை பகடி செய்வதுபோல் அமைக்கப்பட்ட இந்தப் பாடலில் காவல்துறையை கேள்வி கேட்பதுபோல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திருமுருகன் காந்தி, பியூஷ் மனுஷ், வளர்மதி, முகிலன் மற்றும் பல சமூக செயல்பாட்டாளர்கள் நடித்திருக்கின்றனர்.

    மேலும் இந்தப் பாடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லக்கண்ணு சிறையிலிருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.



    ’காக்கி கலரு, காக்கி கலரு எதுக்கு எங்கள அடிக்கிற, கழுத்த புடிச்சு நெறிக்குற’ என்று தொடங்கும் பாடலில் ‘போராடுபவர்களை ஒடுக்குவதுதான் ஜனநாயகமா’  என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், சே குவேரா, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரின் புகைப்படங்கள் குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இறுதியில் இந்தப் பாடல் Anti - Indians-க்கு சமர்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாடலாசிரியர் யுகபாரதியின் வரிகளுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியிருக்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ராஜூ முருகன், இந்தப் படம் முழுக்க முழுக்க அரசியல் படம் இல்லை என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.



    எனது பேனருக்கு அண்டா, அண்டாவாக பால் அபிஷேகம் செய்யுங்கள் - சிம்பு - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Music director santhosh narayanan

    அடுத்த செய்தி