Home /News /entertainment /

“ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி“ - ஜிப்ஸி படத்தின் சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகள்

“ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி“ - ஜிப்ஸி படத்தின் சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகள்

ஜிப்ஸி படத்தில் சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது யூடியூபில் வெளியாகி உள்ளது.

ஜோக்கர் படத்தை அடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. ஜீவா நாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து தணிக்கைக்குச் சென்றபோது படத்தின் பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டன. இதையடுத்து இந்தப் படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக் குழு.

தணிக்கையில் எழுந்த பல்வேறு சிக்கல்கள், படம் ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட பிரச்னைகளைத் தாண்டி இத்திரைப்படம் வரும் 6-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தணிக்கையின் போது படத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காட்சிகளை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.



Published by:Vijay R
First published:

Tags: Gypsy

அடுத்த செய்தி