“என்றைக்கும் எங்கள் ராணி தான்”-பாட்டியின் மறைவு குறித்து ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

ஜி.வி.பிரகாஷ்

தனது பாட்டியின் மறைவு பற்றி நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.

 • Share this:
  ஆஸ்கர் நாயகன் என்ற பெயரை பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் இன்று உடல்நல குறைவால் காலமானார். தாயார் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். திரைப்பிரபலங்கள் பலரும் தொடர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், ஜிவி பிரகாஷ் பாட்டியின் மறைவு குறித்து ட்வீட் செய்துள்ளார்.

  ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் ஜி.வி.பிரகாஷிற்கு பாட்டியாவர். இந்நிலையில் பாட்டியுடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் இருக்கும் புகைப்படத்தை ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘என்றுமே நீங்கள் எங்கள் ராணி’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.     இந்த புகைப்படத்தை பார்த்த ஜி.வி.யின் ரசிகர்கள் தங்களின் இரங்கலை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: