• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கஜா பாதிப்பு: ``தென்னை, தேங்காய்க்கு உரிய விலை கொடுங்கள்” - ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

கஜா பாதிப்பு: ``தென்னை, தேங்காய்க்கு உரிய விலை கொடுங்கள்” - ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

டெல்டா பகுதிக்கு உதவ நடிகர் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்

டெல்டா பகுதிக்கு உதவ நடிகர் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்

GV Prakash | கஜா புயலால் பாதிப்பட்டுள்ள இடங்களில் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்கள் மற்றும் தேங்காய்களுக்கு உரிய விலை கொடுங்கள் என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் கோரிக்கை வைத்துள்ளார். #CycloneKaja #SaveDelta

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயலால் பாதிப்பட்டுள்ள இடங்களில் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்கள் மற்றும் தேங்காய்களுக்கு உரிய விலை கொடுங்கள் என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார்.

    நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர், அரசு அளித்த சேத விபரங்களைவிட டெல்டா பகுதியில் பலமடங்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், இங்கு சாய்ந்து கிடக்கும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தென்னை மரங்கள் மற்றும் தேங்காய்களை உரிய விலை கொடுத்து வாங்க உதவுங்கள் என்று அவர் வேண்டுகொள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்ட வீடியோவில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக என்னுடைய நண்பர்களுடன் வந்துள்ளோம். அரசு அளித்த சேத விபரங்களை விட மோசமான நிலையே இங்கு இருக்கிறது. மின்சார வசதியை மறுசீரமைப்பு செய்ய ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் ஆகும் என்று சொல்கிறார்கள். அனைவரும் நிவாரணப் பணிகளை செய்துவருகிறார்கள். ஆனால், அவ்வளவு செய்தாலும் இங்கு போதாத நிலைமை உள்ளது. இங்கு சாய்ந்து கிடக்கும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தென்னை மரங்கள் மற்றும் தேங்காய்களை உரிய விலை கொடுத்து வாங்க உதவுங்கள். இந்த மண்ணை பரிசோதனை செய்து குறைந்த காலத்தில் வரக்கூடிய பயிர்களை நடுவதற்கு உதவி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: