'காதலை தேடி நித்யானந்தா‘ - விர்ஜின் பசங்க ஆர் பேக்!

காதலை தேடி நித்யா நந்தா போஸ்டர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் `காதலை தேடி நித்யா நந்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்த படம் திரிஷா இல்லனா நயந்தாரா. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கதாநாயகனாக நடித்த ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில்  ‘பிட்டு படம்டி’ போன்ற  பாடல்களும் ஹிட் அடித்தன.

  இந்நிலையில் இதே வெற்றிக் கூட்டணியின்  தயாரிப்பில் அடுத்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு காதலை தேடி நித்யா நந்தா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை ஜி.வி.பிரகாஷ்குமார் தன் ட்விட்டர் பக்கத்தில்  "யெஸ் வீ ஆர் பேக்" என்று பதிவிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.  நடிகர் ஜெயம் ரவியும் “விர்ஜின் பசங்க ஆர் பேக்” என்று ஜி.வி.பிரகாஷ்குமாரின்  `காதலை தேடி நித்யா நந்தா’ போஸ்டரை ரீட்வீட் செய்துள்ளார்.

  Published by:Saravana Siddharth
  First published: