• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’சட்டங்களை ஏற்றுக் கொள்ள சொல்லி விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலை’ - ஜி.வி.பிரகாஷ்

’சட்டங்களை ஏற்றுக் கொள்ள சொல்லி விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலை’ - ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி பிரகாஷ்

ஜி.வி பிரகாஷ்

"மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக, போராட்டம் நடத்துவது ஜனநாயகம். "

  • Share this:
    விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக இணையத்தின் வைரல் டாபிக்கும் இது தான்.

    புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்கள் பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். பாடகி ரிஹானா, நடிகை மியா கலீஃபா மற்றும் பல சர்வதேச பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ட்வீட் செய்ததை அடுத்து இந்த பிரச்சினை சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது. இருப்பினும் இந்திய பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பல நடிகர்கள் இந்திய பிரச்சினைகளில் வெளிநாட்டினர் தலையிடக் கூடாது என்ற ரீதியில் ட்வீட் செய்துள்ளனர்.

    ’மாநாடு டீசரை டெனெட் படத்துடன் ஒப்பிடுவது கெளரவமாக இருக்கிறது’ – வெங்கட் பிரபு



    இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில், “எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு. அரசாங்கம் மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், புதிய சட்டங்களை ஏற்றுக் கொள்ள சொல்லி விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலை. மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக, போராட்டம் நடத்துவது ஜனநாயகம். அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்...” என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: